HI FRIENDS,

எழுதி அனுப்பிய கையோடு மறந்தும் போயாயிற்று .வழக்கமாக வாங்கும் பேப்பரை மட்டும் பிரித்து பார்த்துவிட்டு புத்தகத்தை பிரிக்காமலேயே பத்திரமாக பழைய பேப்பர்களோடு சேர்த்து அடுக்கியாயிற்று . இன்று காலை எந்த பெயருக்கு செக் போட …? என தினமலரிலிருந்து போன் .எதற்கு செக் …? என் கேள்வியில் நொந்தவர் , வாரமலர் பொங்கல் சிறப்பிதழில் உங்கள் கதை வெளியாகியிருக்கிறதேம்மா அதற்கு …அவ்வளவுதான் என் வீடு சந்தோச நெருப்பேற்றிக் கொண்டது .பரபரவென பழைய பேப்பருக்குள் என் கணவரும் , பிள்ளைகளுமாக தேடி வாரமலர் புத்தகத்தை எடுத்து கதையை கண்டுபிடித்து “வாவ் சாதிச்சிட்டீங்க …” என கை கொடுத்து அணைத்து பாராட்டி என சந்தோசம் கொண்டாடிய நிமிடங்கள் மகிழ் திணறல் தருணங்கள் .அதே மகிழ்வை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் தோழமைகளே .தினமலர் – வாரமலர் இந்த வார பொங்கல் சிறப்பிதழில் எனது “ரௌத்ரம் பழகு ” சிறுகதை வெளியாகி உள்ளது .படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் .

இது எனது கதைக்கான இ புக் லிங்க் .இதில் நீங்கள் கதையை வாசிக்கலாம் தோழமைகளே …

http://m.dinamalar.com/weeklydetail.php?id=40978

Leave a comment

9 COMMENTS

  1. ஒரு பொண்ணோட அம்மாவா இந்த கதை படிக்கும் போது பெண்களை எப்படி வளர்க்கணும்ன்னு ஒரு புரிதலும் தைரியமும் வருது பத்மா மேம். ரொம்ப அருமையான கதை.

  2. அனைத்து பெண்களை பெற்ற தாய்மார்களும் படிக்க வேண்டிய கதை. அனைத்து பெண்களும் அபிராமி போல் தைரியமாக இருக்க வேண்டிய சூழலை உருவாக்கிய ஆண்களை பெற்ற தாய்மார்களும் ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும். அருமையான கதை மேம்.

LEAVE A REPLY