“கன்னம் வைத்த கள்வனே “

நாவலில் வரும்கவிதைகள் பற்றிய சிறு விளக்கம் –

என் கதைகளின் ஆரம்பத்தில் வரும் கவிதைகள் எனது திருப்திக்காக மட்டுமே எழுதப்படுபவை . ஏனெனில் கதை படிப்பவர்களில் அநேகம் பேர் கவிதைகளை கடந்துதான் போய்விடுவீர்கள் என நான் அறிவேன் .இந்த முகநூலில் கவிதைகளே எனக்கான ஆரம்ப அறிமுகம் .எனக்கு Muthulakshmi Raghavan mam நட்பை பெற்று தந்த்தும் எனது கவிதைகளே . வெறும் கவிதைகள் அனைவரையும் சென்றடையாது .அதனால் கதைகளினிடையே கவிதைகளை சேர்த்து எழுதுங்கள் என்ற ஐடியா கொடுத்ததும் அவர்தான் .நான்கு அல்லது ஐந்து வரிகளில் உங்கள் கவிதைகளை முடித்து கொள்ளுங்கள்பா என்றுதான் M.R மேம் சொல்வார் .ஆனால் இந்த கவிதைகள் அதற்கு கட்டுப்படாது நீண்டு கொண்டே செல்லும் .பிள்ளையின் துடுக்கடக்கும் தாயென அவற்றை நறுக்கியபடியே இருக்க வேண்டும் . கதையை எழுதி முடித்த பின்பே அந்தந்த அத்தியாயத்திற்கேற்ற கவிதைகளை கோர்ப்பேன் . இரண்டே நிமிடங்களில் எழுதிய கவிதைகளும் உண்டு .இரண்டு மணி நேரம் யோசித்து எழுதிய கவிதைகளும் உண்டு .எப்படி எழுதினாலும் புரியப் போறதில்லை …இந்த கவிதையை எதுக்கு எழுதனுமாம் …உதடு சுளிப்பாள் என் மகள் . சிரித்துக் கொள்வேன் . ஐயாயிரம் பேர் வாசிக்கும் என் கதையில் பத்து பேர் கவிதைகளை வாசித்தால் அதுவே எனக்கு பெரு நிறைவு . இப்போதும் கவிதைகளுக்கென தனியாக வரும் பாராட்டுக்களே கதைக்கு வரும் பாராட்டுக்களை விட எனக்கு மகிழ்வை தரும் .அந்த வகையில் நிறைய தோழமைகள் இப்போது கவிதைகளை பாராட்டுகிறீர்கள் . மிகுந்த பாராட்டுக்கள் மிகைத்த சந்தோசங்கள் .

சமீபமாக கவிதைகளை எப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கும் சில தோழமைகளுக்காக இந்த பதிவு .

Leave a comment

3 COMMENTS

  1. உங்கள் கவிதைகள் ஆழ்ந்து உரைப்பவை……மேலொட்டமாய் புரியாது……புரியும் பொழுது இனம் புரியா சுகம் பரப்பும்….எனக்கு உங்கள் கவிதைகளின் மேல் தீராக்காதல் மேம்…..please continue your kavithaigal….

  2. உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமையானது. முள்ளில் ரோஜா கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தது.

LEAVE A REPLY