HI FRIENDS,

Here is ATHIRAI’s ongoing new SIRUKATHAI  “KANAVU ”. Read and share your comments..

தீபாவளி சம்பந்தமான கதை என்றதும் பட்டாசு விபத்து , முதலாளிகளின் அராஜகம் , குழந்தை தொழிலாளர்களென அதீதங்களை புனைந்து ஒரு கதையைத்தான் எதிர்பார்த்திருத்தேன் .கையாள எளிதாக இருக்கிறதென இந்த கருத்தத்தைத்தான் நிறைய எழுத்தாளர்கள் கையில் தொடுகின்றனர் .ஆனால் இங்கிருக்கும் உண்மை நிலை …அது யாருக்கும் தெரிவதில்லை .தெரிந்து கொள்ள முனைவதுமில்லை .அறிமுக எழுத்தாளரென்ற தயக்கமின்றி ஆதிரை அழகாக உண்மை நிலையை தொட்டு இந்த கதையை எழுதியுள்ளார்
சிவகாசியில் வசிப்பதோடு பட்டாசு தொழிலோடு தொடர்புடையவள் என்பதினாலும் இந்த சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த தொழிலுடனோ , ஊருடனோ சம்பந்தமில்லாத  ஆதிரை  இந்த கதையை எழுதியுள்ளது எனக்கு மிக ஆச்சரியமே .பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரது ஆதங்கமே இக்கதை என கூறுகிறார் ஆதிரை .தீப்பெட்டித் தொழிலும் , பட்டாசுத் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து வருகிறது .பெரிய பெரிய முதலாளிகளே திணறுகின்றனர் .சிறிய தொழிலகங்கள் மூச்சை பிடித்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் .மிகச் சிறியவர்கள் அழிந்தே போய்விட்டனர் .பெருமூச்சும் , கண்ணீருமாக  புதைகுழி ஆழ்தலில் செய்வதறியாது இழுபட்டுக் கொண்டிருக்கிறது சிவகாசி .கிட்டத்தட்ட அழிந்து விட்ட தொழிலின் முதலாளியின் – தொழிலாளியின் உள் மன ரணங்களை இக்கதையில் காட்டியுள்ளார் ஆதிரை . இந்த கதையின் அனுபவங்களை அறிந்தவள் என்ற முறையில் …எங்களின் வாழ்வியல் கதைக்கு மிகுந்த நன்றி ஆதிரை .எல்லோரும் கதையை படித்து பாருங்கள் தோழமைகளே.இன்றைய சிவகாசியின் உண்மை நிலை இதுதான் .
FullScreen Mode

Leave a comment

2 COMMENTS

  1. நிச்சயம் அக்கா…..இப்பொழுது நமக்கு தேவையான ஒன்று……
    அன்னியப் பொருளை நம் முன்னோர்கள் எதிர்த்தார்கள்…. நம்ம  நாட்டுல வியாபாரம் பன்றதுக்காக வந்து நம்மளை 300 வருசம் ஆண்டு ஆட்டுவித்தான் அந்நியர்கள்… ……..மீண்டும் அதே தவறை தான் மக்களும். ….அரசும் செய்து கொண்டு இருக்கிறது….. அன்னியப் பொருட்கள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே போகிறது. …
    நம் சந்ததிக்கு நாம் தரப்போவது… ….
      சுதந்திர நாட இல்லை அடிமை நாட…..
    நாம் தான் சிந்திக்க வேண்டும். ……. தொடர்ந்து
    உரக்கச்சொல் அக்கா உன் எழுத்து மூலம். …..

     

LEAVE A REPLY