Hi friends ,

Here I share my opinion about vijay TV show ” BIG BOSS ” .

உற்சாகமாக ஆரம்பித்து …உச்சங்களை தொட்டு …வெறுப்புகளை காட்டி …வெறுமைகளில் நின்று , திணறித் திணறி ஒரு வழியாக நூறாவது நாளுக்கு இழுத்து வந்துவிட்டனர் .ஹீரோயினுக்கு வில்லனாக உணர்த்தப்பட்ட …உணரப்பட்டவர் …இன்று வெற்றியாளர் !!! அதாவது ஹீரோ … அப்போது அவர் நியாயமானவர்தானோ ????
இது ஸ்கிரிப்டா …இத்தனை நீள ஸ்கிரிப்ட் சாத்தியமா …என எல்லோரும் கமலஹாசன் உட்பட மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கின்றனர் .உண்மைதான் இத்தனை நீள ஸ்கிரிப்ட் சாத்தியமில்லைதான் .ஆனால் உனக்கான கேரெக்டர் இது …இன்று உன்னுடைய செயல் இது …இவருடன் இன்று உனக்கு உரசல் , வாய் சண்டை , கடுமையான வார்த்தைகள் , அழுகை – இது போன்ற குறிப்புகள் சாத்தியம்தானே .
என் கணக்குப்படி இப்படி நடத்தப்பட்டதுதான் இந்த ஷோ .ஆரம்பித்த ஒரு வாரம் இவர்களை உள்ளே விட்டு நடமாட , பேச வைத்து அவர்களின் கேரெக்டர்களை கணித்து அவர்களின் தன்மைக்கேற்ப , ஆளுமை காயத்ரி , அல்டாப்பு ஜூலி , நேர்வழி ஆர்த்தி ,  தாழ்வு மனப்பாண்மை பரணி , குழந்தை மன ஓவியா , சூழ்நிலை கைதி ஆரவ் , சமாளிப்பு சிநேகன் என அவர்களது குணங்களை ஒட்டிய இன்ஸ்ட்ரக்சன்கள் , சீன்கள் தரப்பட்டன . அவற்றிற்கான இடங்களும் கூட …
நன்றாக கவனித்தீர்களானால் அந்த பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு செட்டிங்கும் கிச்சன் , பெட்ரூம் , ஸ்விம்மிங் பூல் , ஸ்மோக்கிங் ரூம் , பாத்ரூம் என சம அளவில் பங்கேற்பாளர்களால் உபயோகிக்க பட்டிருக்கும் .அதாவது லொக்கேசன் முதல் வசனம் வரை …இல்லையில்லை வசன குறிப்புகள் வரை பிக்பாஸ் டீமின் முன்னேற்பாடுகளே …
ஒரு ஹீரோயின் , அவளுக்கு கொஞ்சம் வில்லிகள் , அவளுக்கு ஏமாற்றம் தரும் ஹீரோ , அவளுக்கு வரும் மன அழுத்தங்கள் , கண்ணீர் – ஒரு வெற்றி பெறும் நெடுந்தொடருக்கான பார்முலா இது .அதுவேதான் இந்த ரியாலிட்டு ஷோவிலும் சரியான இடங்களில் கச்சிதமாக உபயோகப்படுத்த பட்டுள்ளது .எனவே ஷோ சூப்பர் டூப்பர் ஹிட் .
அந்த ஹீரோயினும் , வில்லிகளும் வெளியேறியதும் ஷோ நொண்டியடித்து ,செய்வதறியாது திணறி , புதுமுகங்களை அறிமுகப் படுத்தி …நிறைவின்றி , பழைய முகங்களை திரும்ப இழுத்து வந்து தடுமாறி …ஒரு வழியாக முடிந்துவிட்டது .
இல்லையில்லையென  பலமாக தலையாட்டினாலும் இது ஸ்கிரிப்ட்தான் .ஸ்கிரிப்ட் என தெரியாமல் நெய்யப்பட்ட திறமையான ஸ்கிரிப்ட் .அப்படியே ஆனாலும் இத்தனை வித வித கேரெக்டர்களை உண்டாக்கி , அவர்களுக்கான சூழல்களை உருவாக்கி இது போல் ஒரு விளையாட்டு கொஞ்சம் கடினம்தான் .பின்னணியில் இதற்கு மிகப் பெரு உழைப்பிருப்பதை மறுப்பதற்கில்லை .
இதனால் என் வாழ்வு மாறி விட்டது , என் குணம் தேறிவிட்டது , என் குடும்பம் கூடி விட்டது என்பது போன்ற ஹம்பக்குகளையெல்லாம் விட்டு விட்டு , பொழுது போக இன்னொரு நெடுந்தொடர்  அவ்வளவே … வித்தியாசமான முயற்சி .நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான் .வாழ்த்துக்கள் விஜய் டிவி .
All the best for the NEXT season vijay tv..
                                                                                                   – P.G

 

 

Leave a comment

1 COMMENT

  1. இதெல்லாம் தெளிவான ஸ்கிரிப்ட் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை!!பொழுது போக்க மட்டும்…!! மற்ற படி பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை..!!

LEAVE A REPLY