Hi friends ,

I WANTED TO SHARE A SWEET OPPORTUNITY I GOT RECENTLY…

திரைப்பட இளம் இயக்குனர் ஒருவர் எனது நாவல் ஒன்றை திரைப்படமாக்க விரும்பி என்னை அணுகியுள்ளார் . இதில் எனக்கு முதல் ஆச்சரியம் கதைகளை படித்து விட்டு அதனை அப்படியே ஜெராக்ஸ் அடித்து தங்கள் பெயர் போட்டுக் கொள்பவர்களுக்கிடையே நியாயமான முறையில் கதையை கேட்பவர் எனக்கு ஆச்சரியம் .இந்த நியாயத்திற்காகவே அவருக்கு கதையை கொடுக்கலாம் . இதனை நான் அவரிடமே தெரிவித்த போது , கதையை திருட்டுக் கொடுக்கும் வேதனை எனக்கும் தெரியும் மேடம் .அந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றார் .மரியாதையான , தெளிவான மனிதர் .

எனது கதைகளின் ஒவ்வொரு கேரக்டரையும் , சம்பவங்களையும் துளித்துளியாக கிரகித்து வைத்துள்ளார் .அவர் சொல்ல சொல்லவே எனது கதையின் சிறப்பு எனக்கே தெரிகிறது.

கணவர் , குழந்தைகள் என எளிமையான வீட்டு வாழ்வில் இருப்பவளுக்கு இந்த வாய்ப்பு …ம் ..பார்க்கலாம் .

சினிமா என்பது கோடிக்கணக்கில் பணம் புரளும் ஓரு மாயலோகம் .ஒரு படம் எடுத்து வெளிவருவதற்குள் எத்தனையோ ஆயிரம் சிக்கல்களை சந்திக்கும் . எனக்கு இந்த வாய்ப்பு க்ளிக் ஆகுமோ …ஆகாதோ …பெரிய எதிர்பார்ப்புகளில்லை .

ஆனால் மெனக்கெடல்களே இன்றி என் வாசல் தேடி வந்த இந்த வாய்ப்பு எனது எழுத்துக்களுக்கான அங்கீகாரம் .என் வரையில் அவ்வளவே .

Leave a comment

11 COMMENTS

  1. Kandipa nadakum… Nadakanum… Unga stories elamay drnft ah irukum… Best wishes mam…inum neraiya neraiya novels nenga eluthanum… All the best..

  2. சந்தோஷமான செய்தி… பத்மா மேம்… இந்த அங்கீகாரத்திற்கு நீங்கள் தகுதி உடையவர் தான்… வாழ்த்துக்கள்…!!! ஆனால் எந்த கதை…!! யார்.இயக்குனர் ??என்று சொல்வவேயில்லையே…??!.

LEAVE A REPLY