BOGAN  –  REVIEW

 

bogan_3152016_m

உனக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு பார்த்திருக்கிறேன் …அம்மா பிள்ளையிடம் சொன்ன மறுவிநாடி அந்த மகாலட்சுமி டாஸ்மாக்கில் கூட்டத்தில் முண்டியடித்து பாட்டில் வாங்கிக் கொண்டிருக்கிறாள் .பிறகு தோழியோடு சேர்ந்து உட்கார்ந்து குடிக்கிறாள் .போலீசிடம் சலம்புகிறாள் .அப்பாவை மரியாதையில்லாமல் பேசுகிறாள் .இதையெல்லாம் ஹீரோ ரசிக்கிறார் …என்ன கொடுமை இது ….? இப்படியா படம் எடுப்பார்கள் ….? ஒருவர் பாக்கியில்லாமல் எல்லா ஹீரோக்களையும் குடிகாரனாக , டாஸ்மாக் முன்னால் குடியிருப்பவனாக காட்டியாயிற்று .இனி ஹூரோயின்களா ….? இப்படித்தான் பெண்கள் தமிழ்நாட்டில் குடித்து கொண்டிருக்கின்றனரா …? இந்த காட்சியை பார்க்கும் இரண்டுங்கெட்டான் இளைய சமுதாயம் ஆணோ …பெண்ணோ குடிப்பதில் பெரிதாக தவறொன்றும் இல்லையென்று எண்ணிவிடாதா …?அப்படி எங்கேயோ கிடக்கும் ஒன்றிரண்டுகளை இப்படி வெளிச்சமிடுவது நியாயமா …? நீங்கள் சொல்லும் கதை பொழுதுபோக்கோடு ஏதோ ஒரு நியாயத்தை மக்களுக்கு சொல்லட்டும் .இது போல் பால் மனங்களில் நஞ்சை கலக்காதீர்கள் இயக்குனர்களே …இந்த ஒரு காட்சியினாலேயே எனக்கு இந்த படம் கடைசி வரை பிடிக்காமலேயே போய்விட்டது .

 

Bogan Movie Images & Wallpaper (4)#போகன்                                                                       

– P.G

Leave a comment

LEAVE A REPLY