தேங்காய் பால் கொழுக்கட்டை

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1/2 கப்
பொடித்த வெல்லம் – 1/2 கப்
தேங்காய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை

பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம் தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

Leave a comment

LEAVE A REPLY