பிறமொழி படங்களில் மட்டுமே நாம் கண்ட ..காலத்தை கடந்து செல்லும் கதை .தமிழில் இந்த வகை இரண்டாவது முயற்சி .முதல் படத்துடன் ஒப்பிடுகையில் தரம் குறைவுதான். காரணம் …தந்தை , தாயை கொன்றவனை பழி வாங்கும் அரத பழசான ஹீரோயிச திணிப்பாக இருக்கலாம் .

இப்பொழுதெல்லாம் நம் ஹீரோக்கள் வில்லனுக்கென தனி பணம் கொடுக்கும் செலவை தயாரிப்பாளருக்கு வைப்பதில்லை .இதிலும் அது போல் சூர்யா …வில்லனும் அவரே .அந்த வில்லன் வேடத்தில் மட்டுமே சிறிது வித்தியாசம் .மற்ற கேரக்டர்கள் வழக்கம் போல் …வில்லனும் அதிகமாக கவரவில்லை .

சமந்தா …வழக்கமான ஹீரோயின் .பின்னாலேயே வரும் காதலனை அப்படியா கனவென்று நினைப்பார் ….? பெண்களென்றாலே லூஸு என்ற நினைப்பா …? காதலில் காமெடி என்றால் பெண்களை அரை லூசாக காண்பிப்பது என்ன லாஜிக்கோ …?டைரக்டரின் கற்பனை பஞ்சத்தை காட்டும்  எரிச்சலூட்டும் காட்சிகள் அவை .

இதையடுத்து படத்தில் சொல்லக்கூடிய கேரக்டர் சரண்யா .வழக்கமான பாசமான காமெடி கலந்த ஹீரோவின் அம்மா .நிறைவாக செய்திருக்கிறார் .கையில் கிடைத்த குழந்தைக்காக அவர் தன் வாழ்வையே தியாகம் செய்த இடம் நெகிழ்ச்சி .இந்த நிலை இறுதியில் மீண்டும் காலம் மாறும்போது மாறி , அவர் தனது இழந்த வாழ்வை பெறுவதாக வரும்போது ஒரு நிறைவு .

இதை தவிர அந்த காலநிலை மாறி ஆரம்பத்திலிருந்து வரும்போது , நடக்கும் நிகழ்வுகள் எதுவும் வேறெந்த நிறைவையும் தரவில்லை .அந்த வாட்சை அழிக்காமல் தூக்கி எறிவது ஏனோ …? அடுத்த பாகத்திற்காகவா ..???

அப்பா பெரும் பாடு பட்டு நாட்களை கடந்து இருபத்திநான்கு மணி நேரத்திற்கு மட்டுமே  கண்டுபிடித்ததை மகன் எளிதாக ஒரே நாளில் … வருடங்களில் மாற்றி  கண்டுபிடித்து விடுகிறாராம் .ஏன்னா அவர் ஒரு வாட்ச் மெக்கானிக் .அடப்போங்கப்பா ….

காலயந்திரத்தில் ப்ரீஸ் செய்து நிகழ்வுகளை நிறுத்திவிடும் உத்தியால் …உறையும் மழைத்துளி , நிற்கும் சருகு , கேட்சாக போகும் பந்து சிக்சராவது ….இறுதி காட்சியில் வில்லன் சுட்ட புல்லட் அவனுக்கே மாறுவது போன்றவை ரசிக்ககூடிய காட்சிகள் என்றால் …

ஹீரோயினுக்கு பொட்டும் , பூவும் வைப்பது , வண்டியை பஞ்சர் பண்ணுவது , வில்லனின் ஆபிஸ் வேலையாளிடம் ஐடி திருடுவது ….போன்றவை எரிச்சலூட்டும் காட்சிகள் .திரும்ப , திரும்ப ரிபீட் ஆகும் காட்சிகள் சலிப்பு .

பாடல்கள் ஐய்யய்யோ …ஏ.ஆர் .ரகுமானா …!!!!

எப்படியோ ….ஹாலிவுட் படங்களின் வித்தியாசங்களை நமது தமிழ் படங்களிலும் கொண்டு வர வேண்டுமென்பதற்காக எடுக்கப்படும் இது போன்ற வித்தியாசங்களை வரவேற்போம் .

24 – வித்தியாசத்திற்காக ….ஓரே ஒரு முறை ….

Leave a comment

LEAVE A REPLY