நேற்று செய்த குலோப்ஜாமீனில் உருண்டைகளெல்லாம் எடுத்து காலி பண்ணிவிட்டு சர்க்கரைபாகினை பத்திரமாக வைத்திருந்தனர் என் பிள்ளைகள் .குலோப்ஜாமூன் சாப்பிடும்போது முழு உருண்டையாக வாய்க்குள் திணிக்க போவதில்லை
ஆனாலும் கிண்ணத்தில் எடுத்து வைக்கும்போது முழு உருண்டைகளாகத்தான் எடுத்து வைக்கின்றனர் .இதனால் துண்டான உருண்டைகள் கலைந்து போய் பவளங்கள் மிதக்கும் தடாகம் போல் அழகாக காட்சியளித்த ஜீராவை வீணாக்க மனமின்றி செய்தது இந்த டிஷ் .

அரைத்து வைத்திருந்த இடியாப்ப மாவை ஜீராவின் அளவிற்கேற்ப கலந்து , அரை ஸ்பூன் நெய் , ஏலக்காய் , தேங்காய் துருவிப்போட்டு …துணி விரித்து இட்லி தட்டில் அடுக்கி ரைஸ் குக்கரில் வேக வைத்து எடுக்க …வித்தியாசமான மணம் , ருசியுடன் புது வகை கொழுக்கட்டை தயார் .பால்கோவா கொழுக்கட்டையாம்மா….? வேகமாக தட்டு காலியாகிறது .ரெசிபி…ம்ஹூம் ..சத்தம் மூச் .உங்களுக்காக மட்டும் ரகசியமாக செய்முறை .செய்துபாருங்கப்பா …

Leave a comment

LEAVE A REPLY