This poem is written by Muthulakshmi Raghavan

 

நாட்டுக்குள்ள நிலம இப்ப நல்லாவே இல்ல ..
நல்லவங்க பொழைச்சிருக்க சூழ்நில இல்ல ..
திருடரவங்க ஓங்கிப் பேசும் காலமும் ஆச்சு ..
அதுக்கு ஒரு கூட்டம் கூடும் நேரமுமாச்சு ..
கலிமுத்தி போனதினால
உன் கோவில் இடிஞ்சதா ?
தேனூரில் குடி கொண்ட சிவனே !
நீ சொல்லய்யா
சோழவந்தான் பக்கத்தில தோப்பு இருக்கய்யா ..
ஊரைச் சுத்தி காவல் காக்க நீயும் இருக்கய்யா ..
ஒற்றை ஊரக் காவல் காத்தா போதுமா சிவனே ..?
மற்ற உயிரைக் காவல் காக்க எழுந்து வா சிவனே ..!

Leave a comment

LEAVE A REPLY