கொட்டும் மழையில் க்யூட் குட்டி ஒன்று பைக்கை ரிப்பேர் பார்க்கும் தந்தையை திட்டிக்கொண்டு நிற்க , கடக்கும் வாகனம் அந்த குழந்தை முகத்தில் சேறு அடிக்க , ” பேபி …” என குழந்தையின் கத்தலுக்கு பைக்கின் பின்புறமிருந்து நிதானமாக முகம் உயர்த்தும் ஹீரோ …அட ஒரு மாஸ் ஹீரோவுக்கு வித்தியாச ஓபனிங் ….உடனே குழந்தையை பைக்கில் ஏற்றிக்கொண்டு அந்த காரை விரட்டி சென்று நிறுத்த …நாம் ஒரு ஆக்ரோஷ சண்டைக்காட்சிக்கு காத்திருக்க …” மழைநேரம் …பாத்து மெதுவா வண்டி ஓட்டிட்டு போங்கண்ணா ….” …அந்த குட்டிக்குழந்தை ” சரியான மொக்கை நீ ….” அலட்சிய அழகாய் முகம் சுளிக்கிறது .

இப்படி தனது குழந்தையுடன் நிதான சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் ஹீரோவின் முன்கதை என்ன …? …வழக்கம்போல் ஹீரோயின் பாதி நோண்டுகிறார் .மீதி ஹீரோவே சொல்கிறார் .அப்பாவி நடுத்தர குடும்ப தந்தைக்கு பின்னணி ஆக்ரோச அதிரடி போலீஸ் அதிகாரி ….அம்மா , மனைவி , குழந்தை ,வில்லன் …பழிவாங்கல் …இத்யாதி …இத்யாதி …ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் .

வழக்கமான கதைதான் .முன்பே எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து …இப்போது அஜித் வரை நாம் பார்த்த அத்தனை கதைகளும் இதிலும் .ஆனால் இதில் வித்தியாசம் விஜய் .பல ஹீரோக்கள் செய்த அதே விசயங்களை இவரது பாணியில் இவர் .எப்போதுமே மூலக்கதை ஒன்றாகத்தான் இருக்கும் .ஆனால் அதை கையிலெடுப்பவரை பொறுத்து அதன் வடிவம் மாறும் .அதன்படி இது அட்லியின் பாணி ( பழைய ஷூவுக்கு பாலிஷ் போட்டு ஷோகேஸில் ஏற்றுவதே இவர் வேலையோ ..???? மௌனராகம் …….) .ஆனால் விஜய் என்பதால் வென்றிருக்கிறார் .

படத்திற்கு படம் மெருகேறி வரும் விஜய் இதிலும் பலமடங்கு .நடிப்பு , வனப்பு ,மிதப்பு , சிரிப்பு ….எல்லாம் சேர்ந்து தெறிப்பு .( ஏங்கண்ணா டான்ஸை கவனிக்காம விட்டுட்டீங்க….? ) போலீஸ் வேடம் விஜய்க்கு பொருந்தாதுன்னு சொன்னவங்கள்லாம் திருதிரு .ஒட்ட வெட்டிய தலைமுடியுடன் அந்த யூனிபார்முடன் முதல் அறிமுகம் பக்கா .ஆனால் அந்த கம்பீர அறிமுகத்துடன் பள்ளியில் ரவுடிகளுக்கு பாடமெடுப்பது …ம்ஹூம் .

வழக்கமாக வந்து போகும் சமந்தாவிற்கு இதில் நடிக்கவும் வாய்ப்பு .காதலியாக …மனைவியாக….மருமகளாக …அம்மாவாக .நம் நடிகைகள் எல்லாரும் நல்லாதான்பா நடிக்கிறாங்க .ப்ளீஸ் இயக்குநர்களே …அவுங்க நடிப்பையும் கொஞ்சம் வெளியில் கொண்டுவாங்க .

எமிக்கு அவ்வளவா வேலை இல்லை .குட்டைத் தலையும் , உருட்டை கண்ணாடியுமாக எதற்கு அவருக்கு அப்படி ஒரு மேக்கப் .டீச்சர்ங்கிறதாலா …? ராதிகா அம்மாவாக , மாமியாராக , பாட்டியாக காமெடி கலந்து க்ளாஸிக் .குறிப்பிட வேண்டிய கேரக்டர் ராஜேந்திரன் .படம் முழுவதும் வருகிறார் .காமெடி , சென்டிமென்ட் என பின்னுகிறார் .

அந்த மீனுக்குட்டியை பற்றி சொல்லாட்டா விமர்சனம் நிறைவு பெறாது .மடியில் தூக்கி வைத்து கொஞ்ச தோன்றும் அழகு …அறிவு செல்லம் .( இன்னுமொரு பத்து வருடங்களில் அம்மாவை பின்பற்றி இவரும் விஜய்க்கு இணையா ????…ம்ம்ம்ம்…..)

மகேந்திரன் அவ்வளவாக ஈர்க்கவில்லை.காரணம் சொல்ல தெரியவில்லை .

ஆச்சனோடு சென்டிமென்ட் கலக்க வேண்டுமென்று கொஞ்சம் அதிக சென்டிமென்ட் கலந்துவிட்டாரோ அட்லி …? ஆனாலும் அந்த அதிகத்திற்கும்  ஈடு கொடுத்திருக்கிறார் விஜய் . ஜி.வி பிரகாஷ் …ஓ.கே .வழக்கம்போல் எல்லா பாடல்களும் ஹிட் ஆகுமா ????.பாடல் காட்சிகளில் தான் சங்கரின் சிஷ்யனென அறிவிக்க ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார் அட்லி .

தெறி …விஜய்க்காக….விஜய்  ரசிகர்களுக்காக .

Leave a comment

2 COMMENTS

  1. Nice review. Eppo varum padangalai parkkum porumai than kuraindhu vittadhu. Niraiya padangal varuvadhal endha padamum manadhil eruppadhillai.

  2. Now a days I am not going to theatre. By reading the reviews in the magazines and watching reviews in t v channel 75% story therindhu vidugirathu. The recent and latest film I saw in the theatre is “Muthu” !!!! (1996)

LEAVE A REPLY