This poem is Written by Muthulakshmi Raghavan

கனாக் காணும் காலங்களில் தொடங்கினேன் ..
பின்னர் சிறகு முறிந்த கதையை எனது
விரல்கள் விதைத்து குமுறின ..
கோபத்தில் வடிவெடுத்து
தாபத்தில் அதை புதைத்து
முள்ளான பாதையிலே
பாதங்களின் குருதித் தடம் பதித்து
நான் கடந்து வந்த பாதையிலே
கவிதை மட்டும் இல்லையென்றால்
பெயர் சொல்லும் எனதுடலின் மீது
புல் தரையே படிந்திருக்கும் ..

Leave a comment

LEAVE A REPLY