சிறுவயது முதல் தோழர்களான மூன்று உறவினர்களின்  கனவு பெங்களூரில் போய் வாழவேண்டுமென்பது .அது ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணம் மூலமும் , பாபி சிம்ஹாவுக்கு வேலை மூலமும் கிடைக்க , இவர்களுடன் ஆரயாவும் சேர்ந்து கொள்ள , மூன்று உறவின தோழரகளும் பெங்களூரில் .ஆனால் அவரவர் வாழ்க்கையில் மாற்றங்கள் .அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் …இது கதை .முன்பே பெங்களூர் டேஸ் என மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம்தான் .அப்படியே காட்சி மாறாமல் , கதை மாறாமல் தமிழ் பேசியிருக்கிறது .ஆனாலும் அந்த ஆதியின் …ஈர்ப்பு குறைவே …

ஆர்யா தனது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பு .பாபி சிம்ஹா ..பரவாயில்லை .ஸ்ரீதிவ்யா ரொம்ப சுமார் .நஸ்ரியாவுடன் ஒப்பிடுகையில் பாவம் பொண்ணு ரொம்ப தடுமாறுது.பார்வதி …சூப்பர் .மலையாளத்தில் இவரிடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாமல் இவரையே புக் பண்ணினார்கள் போலும் .தமிழிலும் அசத்தல் .லஷ்மி ராய் …ம் …இன்றைய நவநாகரீக மங்கை .

ரானா …ம் ….அவர்தாங்க .வழக்கமாக வில்லனாக வருவாரே ஒரு ஏழடி உயரத்தில் அவரேதான் .இதில் ஹீரோ .இனி இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாவார்கள் என நினைக்கிறேன் .காதல் தோல்வியிலிருந்து மீள முடியாத மெச்சூர்டு கணவன் .கதாபாத்திரத்துடன் அப்படியே பொருந்தி போகிறார் .

சரண்யா …பட்டிக்காட்டு அம்மாவிலிருந்து நவீனமானவராக மாறிக்கொண்டே வருவது நகைச்சுவையாக காட்டப்பட்டிருந்தாலும் , எதார்த்தமாக தோன்றுகிறது .அவரது நடிப்பும் அருமை .

இத்தனை கதாபாத்திரங்களுக்கான அழுத்தமான கதையிருந்தும் , ஏனோ படம் படு ஸ்லோவாக தெரிகிறது …மெகா சீரியல் போல….எனக்கு மலையாளத்திலேயே அப்படித்தான் தெரிந்த்து தமிழில் இன்னமும் அதிகமாக தெரிகிறது .

மலையாளத்தில் படத்தை பார்த்தவர்கள் அத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது .தமிழில் அந்த அளவு திருப்தியில்லை .

Leave a comment

LEAVE A REPLY