நகர்கின்ற இரவில்

எனைத் தேட யாருமில்லை ..

நிம்மதியுடன் நான்

வார்த்தைகளைத் தேடி கோர்த்தெடுத்தேன் ..

ஒவ்வொரு மணித்துளியும்

எனது சொந்தமாக இருந்தது ..

ஏகாந்தமான இரவு நேரத்தில்

எங்கோ சேவல் கூவும் சப்தம் ..

அது கோழியாக ஏன் இருக்கக் கூடாது

என்ற நினைவு எழுந்தது ..

பெட்டைக் கோழி கூவினால்

பொழுது விடியாதா என்ன ?

இரவின் இருள் கரைந்து

வெளிச்சம் பரவிய நேரத்தில்

எனக்குள் ஏக்கம் எழுந்தது ..

இனி பின்னிரவு வரை

என் நேரம் எனக்குச் சொந்தமில்லை …

by ….muthulakshmiraghavan

Leave a comment

LEAVE A REPLY