இன்று காலை பேப்பரில் மனம் கனக்க வைக்கும் ஒரு செய்தி .ஒன்பது வயது பள்ளி மாணவியை அவளது பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து ஒரு வருடமாக வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர் .இறுதியாக தாங்க முடியாத அந்த குழந்தை தன் பெற்றோரிடம் சொல்ல அந்த மூவரும் இப்போது கைது செய்யப்பட்டு விட்டனர் .இந்த செய்தி தந்த கொதிப்பில் இருந்த போது இன்று முகநூலில் வலம் வந்த ஒரு வீடியோ கவனத்தை கவர்ந்த்து .இரண்டையும் இணைத்து ஒரு சிறுகதையாக்கி விட்டேன் .படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே …

” ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன்மா ..” நந்தினி குரல் கொடுத்தாள் .

” அதை ஏன்டா இப்படி டல்லாக சொல்கிறாய் ..? ” அவள் டையை சரி பண்ணினான் சரவணன் .

உதட்டை  கடித்து யோசித்தபடி ” டாடி ..” என நந்தினி ஆரம்பித்த போது , ” நந்து இன்று அம்மாவால் லஞ்ச் பண்ண முடியவில்லை. லஞ்ச் டயத்தில் வெளியே ஏதாவது வாங்கிக் கொண்டு உங்கள் ஸ்கூலுக்கு வந்து விடுகிறேன் .சரியா ..?இந்தா ஸ்னாக்ஸ் பாக்ஸ் மட்டும் எடுத்துட்டு போய்  காரில் உட்காரு .டாடியும் , நானும் இப்போ வந்திடுறோம் ” உள்ளிருந்து  சாதனா வந்தாள் .தலையாட்டி அந்த பேக்கை வாங்கிக் கொண்டு போய் காரில் ஏறினாள் நந்தினி .

” கொஞ்சநாளாகவே நம்ம நந்து ஒரு மாதிரி டல்லாக தெரிகிறாள் சரண் ” நந்தினியை அவள் ஸ்கூலில் இறக்கி விட்டு விட்டு ஆபிசிற்கு போகும் வழியில் சாதனா சொன்னாள்.

” ம் …நானும் கவனித்தேன் .பாவம் குழந்தைக்கு என்ன பிரச்சினையோ ..? நீ எதுவும் விசாரித்தாயா ..? ” சரவணன் .

” எனக்கு எங்கேப்பா நேரம் இருக்கு …? முடித்து கொடுத்த ப்ராஜெக்ட்டில் ஏகப்பட்ட கோளாறு சொல்கிறார் எங்கள் லீடர் .நாங்கள் எல்லோரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் .நைட் தூங்கவே ஒரு மணி ஆகுது .திரும்ப ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருக்குது .நீங்களும் பார்த்து ட்டுதானே இருக்கீங்க ..? நீங்க அவள்கிட்ட பேசலாமே …?”

” எனக்கு புது ப்ராஜெக்ட் ஆரம்பிச்சதை மறந்துட்டாயா சாதனா ..? எங்கே ஆரம்பிக்கிறது …? எங்கே முடிக்கிறதுன்னு தெரியாமல் நாங்கள் அல்லாடிட்டிருக்கோம் …ஆனால் நந்துகிட்ட பேசனும் .இந்த சன்டே கொஞ்சம் டைம் ஒதுக்கி நாம் அவளிடம் பேசலாம் “

சிறிது நேரம் மௌனமாக வந்த சாதனா ” ஏன் சரண் நான் பேசாமல் வேலையை விட்டுட்டு வீட்டில் இருக்கவா …? பாருங்க நம்ம ஒரே குழந்தை .கொஞ்ச நாளாக முகம் வாடி தெரிகிறாள் .அதை கேட்க கூட நமக்கு டைம் இல்லை. சமயத்தில் இது என்ன வாழ்க்கைன்னு தோணுதுப்பா …”

சர்ரென காரை நிறுத்தியிருந்தான் சரவணன் .” ஏன்டி புத்தியோடதான் பேசுறியா ..? ஐம்பது லட்சத்திற்கு இந்த அபார்ட்மென்ட்டை இப்போதுதான் வாங்கியிருக்கிறோம் .இன்னும் பத்து வருடத்திற்கு ட்யூ கட்ட வேண்டியிருக்குது .என் ஒருத்தன் சம்பளத்தில் இதை நான் எப்படி சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசித்தாயா ..? ” படபடத்தான் .

மேலோட்டமாக பார்த்தால் சரவணன் பேசுவது அநியாயம் போல் தோன்றினாலும் அதனுள்ளிருந்த நியாயம் புரிபட தலையசைத்தாள் சாதனா .

” இன்று லஞ்ச் டயமில் அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு நான் ஒரு ஆட்டோ பிடித்து போய் அவளை ஸ்கூலில் பார்த்துவிட்டு வருகிறேன் .அப்படியே அவர்கள் டீச்சரையும் பார்த்து விட்டு வருகிறேன்” சொல்லிவிட்டு  கண்களின் நீரை அவன் காணாமலிருக்க வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள் .

” ஹாய் நந்து ..என்னப்பா இன்னைக்கு லேட் ….? ” என கேட்டபடி அவளை வரவேற்றனர் சித்ராவும் , சரிதாவும் .

” கிளம்ப கொஞ்சம் லேட்டாயிடுச்சுப்பா .நீங்க ஹோம்ஒர்க முடிச்சிட்டீங்களா ..? ” நந்தினியின் குரலில் லேசான பயம் தெரிந்த்து .

” முடிச்சிட்டோம் .அதுவும் மேத்ஸ் ஹோம்ஒர்க் நிச்சயம் முடிச்சிட்டோம் .இல்லைன்னா பிரச்சினை ஆயிடுமே ” சித்ரா , சரிதா குரல்களில் பயத்தோடு மெல்லிய கலக்கமும் .அனைவரும் எட்டாவது வகுப்பு படிக்கும் குழந்தைகள் .

” ஆமா..முடித்து விட்டால் மட்டும் பிரச்சினை இல்லாமலா போய்விடப் போகிறது …? வேறு ஏதாவது காரணம் அவனுக்கு கிடைத்து விடும் ” துயரத்தோடு சொன்னாள் நந்தினி.

” ஆமாம் ..ஆனாலும் நம் பக்கத்தை நாம் கரெக்டாக வைத்துக் கொண்டால் , நமக்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா ..? ” என பார்க்கலாமே சரிதா சொன்னாள் .

” என்ன ..? என்ன பிரச்சினை உங்களுக்கு …? ” அருகில் வந்தான் சங்கர் .சக மாணவன் .

” ஒன்றுமில்லை நீ போ …” அவனிடம் எரிந்து விழுந்தனர் பெண் குழந்தைகள் .

” எதுக்கு கத்துறீங்க ..? நம்ம கிளாஸுக்கு இன்னைக்கு ஒரு நியூ அடமிசன் வருது தெரியுமா ..? ” புது செய்தி சொல்லும் ஆவல் அவனிடம் .

” என்ன இவ்வளவு நாள் கழித்தா ..? யார் …? யார் …? ” அறிந்து கொள்ளும் ஆவல் மற்றவர்களிடம் .

” ஒரு பொண்ணு .அவுங்க அப்பா ஏதோ கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை செய்கிறார் போல .அவருக்கு இங்கே டிரான்ஸபர் ஆனதால் லேட்டாக ஜாயின்ட் பண்ணுகிறாள் .”

” இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ..? “

” அவர்கள் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில்தான் குடி வந்திருக்கின்றனர் .அதனால் தெரியும் “

” ஹாய் …நான் இங்கே உட்கார்ந்து கொள்ளட்டுமா ..? ” என வந்த அந்த பெண் குழந்தை வட்ட முகத்துடன் , மென்மையாக அழகாக இருந்தாள் .

” என் பெயர் நளினி …” அறிமுகப்படுத்திக் கொண்டாள் .

சுற்றிலும் வந்து மற்ற மாணவர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் .தொடர்ந்து அனைவரும் தங்கள் ஹோம்ஒர்க்கை சரி பார்க்க ஆரம்பித்தனர் . நிறைய பேர் சந்தேகங்களுக்கு நந்தினியையே நாடினர் .அந்த வகுப்பில் அவள்தான் முதல் ரேங்க் வாங்கும் நன்றாக படிக்கும் மாணவி .அந்த பெருமிதம் முகத்தில் தெரிய , தன்னிடம் கணக்குகளை நீட்டிய மாணவர்களுக்கு சரி பார்த்தாள் அவள் .ஓரக்கண்ணால் நளினியை பார்த்துக் கொண்டாள் .பார்த்தாயா என் மதிப்பை …என்பது போல் .

நளினியின் கவனம் நந்தினி கடைசியாக கணக்கை சரி செய்த மாணவனின் நோட்டில் இருந்த்து .

” நந்தினி தப்புப்பா …இது இப்படி வரணும் .” அந்த நோட்டை தான் வாங்கியவள் கடகடவென அந்த கணக்கை சரியாக போட டாள் .அத்தோடு அதனை எளிதாக அனைவருக்கும் விளககவும் செய்தாள் .

அட ..இது எப்படி …? இந்த மெதட்ல போடலாமா ..? உனக்கு எப்படி தெரியும் …? போன்ற கேள்விகளுடன் அனைவரும் நளினி பக்கம் திரும்்பிக் கொள்ள , பொறாமையுடன் அவளை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள் நந்தினி .

” ஏய் அவள் படித்த ஸ்கூலில் அவள்தான் பர்ஸ்ட் ரேங்கான்டி .அதுதான் இவ்வளவு அலட்டுகிறாள் .இந்த சித்ராவை பாரேன் ஒரு சம் போட்டு தரவும் அவள் பின்னாலேயே போய்விட்டாள் ”  சரிதா கூறினாள் .நான் உன் பக்கம்தான் என்பது போல் நந்தினியின கைகளை பற்றிக் கொண்டாள் .

” என்னப்பா ..? நீங்கள் இரண்டு பேரும் சாப்பிடவில்லையா ..? ” நளினிதான் புன்னகையோடு இவர்களருகில் வந்து அமர்ந்தபடி கேட்டாள் .

” நந்தினிக்கு இன்னும் லஞ்ச் வரலை .அதனால்தான் வெயிட் பண்ணுகிறோம் ” சரிதா பதில் சொல்லிவிட்டு நந்தினி முறைக்கவும் நிறுத்திக் கொண்டாள் .

” ஓ…அப்போது என் கூட லஞ்ச் ஷேர் பண்ணிக்கிறீங்களா ..? .இதோ இது எங்கள் வீட்டில் எங்க அம்மா செய்த கொலுக்கட்டை .இதற்கு பெயர் ஔவையார் கொலுக்கட்டை .இதை ஆண்பிள்ளைகள் சாப்பிட  கூடாது .ஏன் …பார்க்கவே கூடாது .ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் .சாப்பிட்டு ் பார்க்கிறீங்களா …? ” டிபன் பாக்ஸ்சை திறந்து நீட்டினாள் .

புதியதொரு நட்பை பெறும் ஆவல் நளினியின்் கண்களில் தெரிந்த்து .வெள்ளை வெளேரென்று நீளமாக , வட்டமாக , உருண்டையாக , சதுரமாக …என பல வடிவங்களில் இருந்த அந்த கொழுக்கட்டைகள் பார்த்ததும் வாயில் நீர் ஊற வைத்த போதும் , அதனை எடுக்க உயர்ந்துவிட்ட சரிதாவின் கைகளையும் இறுக பிடித்து வைத்தபடி ” உங்க ஊர் எது ..?” விசாரித்தாள் நந்தினி்.

நளினி சொன்ன ஊர் ,கிராமத்தோடு சேர்த்தியாக இருக்க …”இதோ பார் நளினி ,இது போன்ற பட்டிக்காட்டு பலகார்ங்களெல்லாம் உன் போன்ற பிள்ளைகளுக்குத்தான் பழக்கம் .என்னைப் போன்ற டீசன்டான சிட்டி பிள்ளைகளுக்கு பழக்கம் கிடையாது .இதை பார்த்தாலே எங்களுக்கு வாந்தி வருகிறது .நீயே தின்னு ..வாடி ” என சரிதாவை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள் நந்தினி்.

” ஏன்டி இப்படி பண்ணினாய. …? ” கொழுக்கட்டை ஞாபகத்தில் சரிதா கேட்க ” ஏன் உனக்கு அவள் பின்னால் போக வேண்டுமா ..? அப்போது போய்கொள் …எனக்கு அவள் போன்ற பட்டிக்காட்டு பெண் ப்ரெண்ட்ஸிப் தேவையில்லை .இவளோடு பழகினால்  நமக்கு நல்ல பழக்கங்களே வராது .இவளோட அம்மா வேலைக்கு கூட போகவில்லையாம் .அப்படி வீட்டில் இருப்பவர்கள் எப்படி இவளுக்கு நல்லது சொல்லி தருவார்கள் …? ” என்றாள் .

” சரிதான்டி ..்” என அவளை சரிதா ஆமோதித்து கொண்டிருந்தாள் .

” நந்தினி …சரிதா …” சித்ரா ஓடி வந்தாள் .

” என்னடி உன் புது ப்ரெண்ட்டை விட்டுட்டு இங்கே வந்துட்விட டாய் …”

” அவளைப் பற்றித்தான் …ஏய் ..அந்த சார் …அவளை வா உன்கிட்ட பேசனும்னு ஸ்போர்ட்ஸ் ரூமுக்குள்ளே கூட்டிட்டு போறாருடி ” மூச்சிரைத்தது .

” ஐயோ ஏன்டி நீ போக விட டாய் ..? ” நந்தினி பதறினாள் .
” நான் வேண்டாம்னு சொல்றதுக்குள்ளே …இவா பாட்டுக்கு டக்டக்குன்னு அவர் பின் னாடி போய்ட்டாடி .்”

” நான் சொல்லலை ..? இவள் முழு மக்கு .இவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு …ஐயோ என்னடி பண்ணுறது ..? அந்த ஆள் நம்மளை மாதிரிதானே இவளையும் சீண்டுவான் ..”

” அவன் ஸ்போர்ட்ஸ் ரூமுக்கு கூப்பிடுறதே அதுக்குத்தானே …”

” நாமெல்லாம் அதுதானே தனியாக போக மாட்டோம் .ஒன்றாக சேர்ந்தே இருப்போம் “

” இவள் ஒழுங்காக கொஞ்சம் பணிவாக இருந்திருந்தால் இவளுக கும் சொல்லிக் கொடுத்திருக்கலாம் .திமிராக இருந்தாள். இப்போது பார் முதல்நாளே மாட்டிக் கொண்டாள் “

” சரி அதை விடுங்கடி அவளை எப்படி வெளியே கூப்பிடுறது ..? வாங்கடி நாமளும் போவோம் .போய் அவளை கூட்டிட்டு வருவோம் …” பதட்டத்துடன் தங்களுக குள் பேசிய குழந்தைகள் ஒரு முடிவோடு அங்கே சென்றனர் .

ஸ்போர்ட்ஸ் ரூம் வாசலை அடைந்த போது உள்ளே கடமுடாவென ஏதோ சத்தம் கேட்டது .

” என னடி அந்த ஆள் அவளை அடிக்கிறானா …? ” நந்தினி சந்தேகப்படுவதற்குள் ஆவென கேட்ட குரல் அந்த ஆணினுடையது .தொடர்ந்து வெளியே ஓடி வந்த அவன் சட்டை கசங்கி , தலை கலைந்திருந்த்து.

” ஏய் நில்லுடா …” பின்னாலேயே வந்த நளினியின் கைகளில் ஒரு ஹாக்கி மட்டை இருந்த்து .இவர்களை பார்த்ததும் ” உங்க்கிட்டேயும் இப்படித்தான் சில்மிசம் பண்ணுவானா ..? சும்மாவா விட்டீங்க இவனை …? மட்டையை சுற்றினாள் .

இப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராத அவன் அதிர்ந்து போய் நின்றிருந்தான் .” என்னடா பார்க்கிறாய் ..? எவ்வளவு திமிர் இருந்தால் என்னை தொடுவாய் …? ” குனிந்து தன் கால் ஷூவை சுழட்டியவள் குதித்து அவன் தலையில் அடித்தாள் .அவன் அலறி குனியவும் முகம் , தோள் ,  உடம்பு என சராமாரியாக அறைய துவங்கினாள் .கூட்டம் சேர துவங்கியது .

” ஏன்டி பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள் ..?உங்களையும் தானே இவன் சீண்டினான் .நீங்களும் வாங்க …”

நந்தினி குனிந்து அந்த ஹாக்கி மட்டையை எடுத்தாள் .” இனி எங்களை தொடுவாயா …? தொடுவாயா …? ” சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் மட்டை வழியாக அவன் மேல் இறக்கினாள் .சரிதாவும் , சித்ராவும் சேர்ந்து கொண்டனர் .

” ஓ…உங்களுக்கு இதுதான் பிரச்சினையா …? இவன் இப்படியா செய்தான் …? ” என்ற சங்கர் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவன் தலைக்கு குறி வைத்து எறிய ரத்தம் வழிய துவங்கியது .தொடர்ந்து கற்களும் அவன் மேல் குவியத்தொடங்கியது .

” என்ன மேடம் இது ..? உடனே போலீசுக்கு போன் போடுங்க …” ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிரந்த தலைமை ஆசிரியையிடம் வாட்ச்மேன் படபடக்க ” யோவ் இருய்யா …சிக்னல் கிடைக்க மாட்டேங்குது .நான் டிரை பண்ணிட்டுதான் இருக்கேன் .நீ போய் ஸ்கூலுக்குள்ளே யாரும் வராமல் பார்த்துக்கோ போ ” என அவனை விரட்டி விட்டு  , போன் போடும் எண்ணமின்றி கைகளை கட்டியபடி சந்தோசமாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள் தலைமைஆசிரியை .

” என்ன மேடம் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க போல ..? ” என்ற கேள்வியில் திரும்பினாள் .

” நான் நந்தினியோட அம்மா .அவளுக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்தேன் .இங்கே நடக்கிற சம்பவங்களை பார்த்தபடி அதோ அங்கே நின் று கொண்டிருந்தேன் ” என்றாள் சாதனா .ஹாக்கி மட்டையை சுழட்டிக் கொண்டிருந்த நந்தினியை அவள் பார்வை பெருமிதமாக பார்த்தது .

” இவன் கரஸ்பான்டோட சொந்தக்காரன் .இவனை பற்றி எல்லாம் தெரிந்தும் ஒண்ணும் செய்ய முடியாமல் நாங்க எல்லாரும் இருந்தோம் .கடவுள் இருக்காருன்னு காட்டிட்டாரு பாத்தீங்களா ..? இந்த குழந்தைகள் எல்லோரும் ‘ அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை ‘ நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகின றனர் .தலைமைஆசிரியை குரல் நெகிழ்ந்திருந்த்து.

ஒரு வழியாக போலீஸ் வந்து அவனை மீட்டபோது அவன் பாதி செத்திருந்தான் .நேரடியாக ஐ.சி.யு வில் அட்மிட் பண்ணும் நிலைமையில் இருந்தான் .

” எப்படிம்மா உனக்கு இவ்வளவு தைரியம் வந்த்து” நளினியிடம் தலைமைஆசிரியை கேட்டாள் .

” ஓடி விளையாடு பாப்பா ன்னு எனக்கு சொல்லிக் கொடுக்கும் போதே ” ரௌத்ரம் பழகு பாப்பா ” ன்னு எங்க அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க மேடம் .புன்னகையோடு சொல்கிறாள் நளினி .அவளுக்கு இருபுறமும் நந்தினியும் , சரிதாவும் நின்றிரந்தனர் .

“காமுகர்கள் நிறைந்திருக்கும் இந்த உலகில் ஒவ்வொரு பாப்பாவும் கண்டிப்பாக ரௌத்ரம் பழக வேண்டும் ” தலைமைஆசிரியை .

” பாப்பாக்கள் மட்டுமல்ல மேடம் .ஒவ்வொரு பெண்ணும் ரௌத்ரம் பழக வேண்டும் ” என்றாள் சாதனா .தலைமை ஆசிரியை கேள்வியாக நோக்க ” நானும் வேலைக்கு போகிறேன் மேடம் ” என றாள் வறண்ட புன்னகையுடன் .

” ஓ…அப்போது நந்தினி கையிலிருந்து அந்த ஹாக்கி மட்டையை நீங்க வாங்கிக்கோங்க…,” சிரித்த தலைமை ஆசிரியையுடன் சாதனாவும் சேர்ந்து கொண்டாள் .

Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.

Leave a comment

5 COMMENTS

LEAVE A REPLY