அரை இருளில் யாரோ  இருவருடன் சண்டையிட்டு யூகிசேதுவுடன் சேர்ந்து போதை பொருளை கமல் கைப்பற்றுவதில் தொடங்கும் கதை , அந்த இரவு விடுதியின் கூட்ட நெரிசலில் தன் கையிலிருந்து பிரிந து விட்ட மகனை  தேடி பதறி , நெரிசலிடையே ஓடி அந்த கதவை கமல் அழுகை கலந்த பதட்டத்துடன் தட்டும் வரை எங்கேயும் துளி தொய்வின்றி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது .ஆனால் இடைவேளையின் பின் முந்தைய வேகம் குறைந்து விடுகிறது .ஒரு கட்டத்தில் பாத்ரூம் மேல் ஒளித்து வைத்த பேக்கை கமல் மேலேறி தேடும் சீனில் சிறு அலுப்பு தட்டி விடுகிறது .பின் திரிஷா , கமல் , அலெக்ஸ் சண்டை காட்சிக்கு பின் மீண்டும் வேகமெடுத்து பரபரப்பு காட்டி முடிகிறது .

வேற்று மொழி படத்தின் தழுவலென்று முன்பே கமல் அறிவித்துவிட்டதாலும் , புதுமை விரும்பியான கமலின் கைவண்ணமென்பதாலும் , படம் நெடுக நிறைய புதிய யுக்திகள் .டைவர்ஸ் மனைவி , காமெடி கலந்த வில்லன் , சண்டையிடும் அதிரடி ஹீரோயின் …இவையெல்லாம் வேற்று மொழி பாதிப்பு பாத்திரங்கள் .மதுஷாலினி மட்டும் நிச்சயம் கமல் பாணிக்காக உருவாக்கப்பட்ட பாத்திர படைப்பு .

கமலின் நடிப்பை சொல்ல வேண்டியதில்லை .குறிப்பிட வேண்டியவர்கள் பிரகாஷ்ராஜ் , திரிஷா , அலெக்ஸ் ,சிறுவன் அமன் அப்துல்லா. வழக்கம் போலவே தனது பாத்திரத்தை ஊதி தள்ளியுள்ளார் பிரகாஷ்ராஜ் . சண்டையிட்டு மைதாமாவில் உருண்டு புரண்டு விட்டு நெக்ஸ்ட் காஸ்ட்யூம் சேன்ச் என அவர் உடையை மாற்றும் காட்சி சிரிப்பு .

மேக்கப்பே இன்றி , உடல் முழுவதும் மூடும் கோட் அணிந்து அதிரடி  ஆக்சன் போலீசாக திரிஷா. கமலை ஒரு கிடுக்கி பிடி போடுவார் பாருங்கள் !!…ஆனால் பாவம் அவரை இந்த அடியா அடிப்பது ??? சும்மா அடித்து விளாசி விடுகிறார் கமல்.அலெக்ஸ் நிதானமாக அலட்டலின்றி கண்களிலேயே நடித்துவிட்டு போகிறார் .

அமன் அப்துல்லா …இயல்பான அழகான நடிப்பு .தனது போனை ஜெகனிடமிருந்து வாங்குவதற்கு அவருக்கு ஆசை காட்டுவதிலிருத்து , அப்பாவை காப்பாற்ற பயத்துடன் கார் ஓட்டுவது வரை நிறைவாக செய்திருக்கிறார் .” இதை ஏன்பா முன்னாடியே சொல்லலை ? ” என அப்துல்லா போனில் கமலிடம் கேட்க , கமல் பதில் சொல்ல முடியாமல் ” ம் ..ம் ஹும் …” என தடுமாறும் காட்சி நெகிழ்ச்சி .

ஆஷா , சம்பத்குமார் , யூகிசேது , ஜெகன் , உமா ரியாஸ் …சும்மா …வந்து போகின்றனர் .நடிக்க வாய்ப்பில்லை .டைவர்சுக்கான ஆஷா தரப்பு நியாயங்களை ஒரு வரியிலேனும் சொல்லியிருக்கலாம் .

” அதுதான் ஆஸ்பத்திரில சேர்த்திட்ட இல்ல , அங்கே நிறைய பேர் இருப்பாங்க ” அம்மா ஆஷா கூற , ” ஆமாம் நிறைய பேர் இருக்காங்க .அதான் சொல்றேன் நீ வந்திடு ” மகன் அப்துல்லா சொல்லுமிடம் அருமை .

நிறைய விறுவிறுப்புதான் .ஆனாலும் ஏதோ சிறு குறை . எனினும் நமது தமிழ் படங்களில் இது போன்ற புது முயற்சிகளை நிச்சயம் பாராட்டவே வேண்டும் .

 

Leave a comment

LEAVE A REPLY