மைசூர் பாகிற்கான கம்பி பதத்தினை விரலில் தொட்டு பார்த்துக் கொண்டிருந்த போது ,சன்னலுக்கு வெளியே கேட்ட எதிர்பாராத சத்தம் சிறு திடுக்கிடலை விரலுக்கு தந்த்து .

” முருகா …” காதுகளை மூடிக் கொண்டாள் சரண்யா .அவள் ஜாங்கிரிக்கான மாவினை கரைத்துக் கொண்டிருந்தாள் .

” பயப்படாதீங்கம்மா , இந்த பசங்க செய்யிற வேலை இது .இருக்கிற பட்டாசையெல்லாம் இன்றே போட்டு தீர்த்திடனும்னுங்கிற வெறியோட போட்டு தள்ளுறாங்க ” சரண்யாவை சமாதானப்படுத்திய சஹானா மீண்டும் கம்பி பத்த்திற்கு திரும்பினாள் .

” சை ஊரெல்லாம் பெத்து போட்டு போயிடுறாளுங்க .அதெல்லாம் என் வீட்டில் வந்து ஆட்டம் போடுதுங்க …” கத்தியபடி வந்தாள் கமலா .அவளது பேரன்களும் அதில் இருக்கிறார்கள் என்பதை மறந்துதான் போனாள் .

” அத்தை நம் சேகரும் , பவித்ராவும் சேர்ந்துதான் வெடிக்கிறார்கள் ” சரண்யா மெல்ல சொன்னாள் .

” சரி..சரி ..எனக்கு தெரியும் .அம்மாவும் , மகளும் வேலையை பாருங்க .பாமாவும் , ரம்யாவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் பசி ..பசின்னுவாங்க “

சரண்யா, சஹானா போல் பாமாவும் , ரம்யாவும் கமலாவிற்கு இன்னொரு மருமகள் , பேத்திதான் .அவர்கள் இன னமும் படுக்கையை விட்டே எழாமல் இருக்க , இவர்களிருவரும் ஐந்து மணிக்கே எழுந்து தீபாவளி பலகாரத்திலிருந்து ,டிபன் ,காபி ,சாப்பாடு வரை பார்க்கும் நிலைமையிருந்த்து .

ஏனென்றால் பாமா பெரிய பதவியில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவள் .அவள் கணவன் சகாதேவன் கமலாவின் முதல் மகன் ஐந்து லட்சம் சம்பளம் அநாசியமாக வாங்குபவன் .  இவர்களின் செல்லபிள்ளை ரம்யா தாய்க்கு இணையாக சம்பளம் வாங்குபவள் . தன் மகனின் இந்த குடும்பம் பற்றி பெருமைப்பட கமலாவிற்கு நிறைய விசயங்கள் இருந்தன.

ஆனால் துக்கிரித்தனமாக கணவனை விழுங்கிவிட்டு ,வக்கத்த வாத்தியார் வேலையில் ் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் சரண்யாவை பற்றியோ , மாதம் முழுவதும் கடுமையாக உழைத்து பிசாத்து இருபதினாயிரம் சம்பாதிக்கும் சஹானாவை பற றியோ பெருமை பேச அவளுக்கு எந்த விசேச விசயங களும் இல்லை .

எனவே தாயும் , மகளும் எப்போது இங்கே வந்தாலும் அவர்களுக்கு சமையலறை உத்யோகம்தான் .இந்த நிலைக்கு முரண்டு பிடிக்கும் சஹானாவை எப்படியாவது சமாதானப்படுத்தி வருடம் ஒரு முறை இங்கே அழைத்து வந்தவிடுவாள் சரண்யா .சொந்தம் வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கு .

வருடா வருடம் பொங்கலுக்குத்தான் இந்த கிராமத்திற்கு அவர்கள் வருவார்கள் .இந்த முறை ஆறே மாதத்தில் திரும்பவும் தீபாவளிக்கு வந்துள்ளனர் .காரணம் உமா .கமலாவின் மகள் .கணவன் மகனுடன் பத்து வருடங களுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டிலாகி விட்டவள் .இப்போது குடும்பத்தோடு இந்த தீபாவளிக்கு வருகிறாள் .் பண்டிகைக்காக இல்லை .அவர்கள் பரம்பரை சொத்துக்கள் கிராமத்தில் இருப்பதை விற்க போகிறார்கள் .அது சம்பந்தமான பத்திர விபரங்களுக்காக வருகிறார்கள் .

” சரண்யா …நான் சொல்வதை கவனி .சகாதேவனுக்கும் ,சந்தானத்திற்கும் , உமாவுக்கும் போல உனக்கும் இந்த சொத்துக்களை விற்பதில் கிடைக்கும் பங்கில் சரி பங்கு இருக்கிறது .ஆனால் சகாதேவனுக்கு ஏதோ நிறைய செலவிருக்கிறதாம் .அது போல் உமாவும் இதற்காகவே பத்து வருடங்கள் கழித்து அங்கிருந்து வருவதால் அவளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் .அதனால் அவர்கள் முன்னே ..பின்னே …எதிர்பார்த்தாலும் நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து போய்விட வேண்டும் ” இப்போது மட்டும் கமலாவின் குரல் குழைந்திருந்த்து .

சஹானாவிற்கு ஆத்திரம் வந்த்து .லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் அவர்களுக்கு செலவிருக்குமாம் .ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு செலவிருக்காதாம் .இவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமாம் .அதாவது அவர்களை போல் பங்கு கேட்காதே .கொடுப்பதை வாங்கிக் கொண்டு போ என்கிறார்கள் .

” நீங்க சொல்றது சரிதான் அத்தை .நாங்க இரண்டே பேர் .எங்களுக்கு என்ன செலவிருக்க போகுது ..? ” இந்த அநியாயத்திற்கு ஒப்புதல் தந்து கொண்டிருந்தாள் சரண்யா .

” நல்லதும்மா .நீ புரிந்து கொள்வாய்னு எனக்கு தெரியும் .சரி ..வேலையை பாருங்க ” போய்விட்டாள் .

” அம்மா …என்னம்மா இது …? “

” விடும்மா ..இவ்வளவு நாள் இந்த பணம் வந்தா நாம் வாழ்ந்தோம் .எப்போதும். போல் வாழ்ந்துவிட்டு போவோம் “

” பூமாதேவி வாரிசுதாம்மா நீங்க ..” எரிச்சலோடு தாயை பெருமிதமாகவே பார்த்தாள் சஹானா .தாத்தா தங்கபாண்டியன் நியாயவாதி .மகனில்லாமல் தனித்திருக்கும் மருமகளுக்குரிய பங்கினை நிச்சயம் அவர் சரியாக கொடுத்து விடுவார் .அப்படி கொடுத்தாலும் சகேதேவன் கேட்டால் அதை சரண்யா விட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம் கமலாவிற்கு .

வெளியே வாண்டுகளின் கூச்சல் அதிகரித்தது .மைசூர் பா வேலை முடிந்துவிட்டதால் வெளியே எட்டிப்பார்த்தாள் சஹானா .சேகரும் ,பவித்ராவும் நிறைய தெரு பசங்களை கூட்டிக் கொண்டு பட்டாசு வெடித்து தெருவையே இரண்டுபடுத்திக் கொண்டிருந்தனர் .

சந்தானத்தின் பேரப்பிள்ளைகள் இவர்கள் .சந்தானந்தம்தான் மகன் , பேரப்பிள்ளைகளுடன் அம்மா , அப்பாவுடன் இங்கு வசித்து வருபவர் .மற்ற மூவரும் வேலை காரணமாக வெளியூர் , வெளிநாடு என செட்டிலாகி விட்டனர் .

” இங்கே பார் பவி இப்படி பிடித்து வை .அப்போதான் மூஞ்சிக்கு வராது .” புஸ்வானம் வைக்கும் முறையை அண்ணனாக தங்கைக்கு காட்டிக் கொண்டிருந்தான் சேகர் .

” ரம்யா கம்பி மத்தாப்பு எரிந்து முடித்ததும் இந்த வாளியில் இருக்கிற தண்ணிக்குள்ள போட்டுடனும் சரியா ..? ” என்று கூறிய   ஒல்லியாய் உயரமாய் இருந்த அந்த உருவம் சஹானாவின் நினைவில் வந்த்து .அன்று வெள்ளையில் கறுத்த புள்ளிகள் சிதறிய சட்டை அணிந்திருந்தான் அவன் .அந்த இருளிலும் கூட வெண்மையாய் மின்னிய அவன் பற்களின் வரிசை கூட இப்போதும் இவளுக்கு நினைவிருந்த்து .அப்போதுதான் அரும்பிக் கொண்டிருந்த இளம் மீசை கூட .பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இப்போது போல் எப்படி மனதில் பதிந்திருக்கிறது ..? இதன் காரணம் சஹானாவிற்கு தெரியவில்லை .

” சஹி ..பாம்பு முட்டை போடுறேன்னு கன்னமெல்லாம் கரியாக வைத்திருக்கிறாய் பார் .போய் கழுவிக் கொண்டு வா . ரம்யா ..பாப்பாவை பார்த்துக்கோ ” ரம்யா இவளைவிட மூன்று வயது மூத்தவள் என்பதால் இவள் பொறுப்பையும் அவளிடமே கொடுத்துவிட்டு  உள்ளே நடந்தான் .அவன் மாதவன் .சஹானாவின் அத்தை உமாவின் மகன் .

சொன்னதை கேட்கும் பழக்கம் இப்போதில்லை .ரம்யாவிற்கு அப்போதே கிடையாது. எரிந்து முடித்த கம்பிகளை வாளியினுள் போடாமல் ஆங்காங்கு கீழே போட்டு ஙைத்திருக்க , முகம் கழுவ எழுந்த சஹானா அப்போதுதான் போட்டு இன்னமும் புகைந்நு கொண்டிருந்த கம்பியின் மேல் கால்களை வவத்துவிட்டாள் .

ஆஆஆ…என்ற அவள் அலறலை கேட்கவும் கையிலுள்ளவற்றை கீழே போட்டுவிட்டு ரம்யா உள்ளே ஓடிவிட்டாள் .வேகமாக வந்தவன் “என்ன பேபி சுட்டுவிட்டாதா ?” பாதங்களை ஆராய்ந்தான் .

பிறகு அவளை அப்படியே கைகளில் தூக்கிக் கொண்டான் ._வெளியே கால்களை கழுவிக் கொள்வதற்காக தண்ணீர் பிடித்து வைத்திருந்த தொட்டிக்கருகே தூக்கி சென்று அவள் கால்களை அதனுள் முக்கினான் .தாளமுடியாத எரிச்சலில் அழத்துவங்கியிருந்தாள் சஹானா .அந்த தொட்டி விளிம்பில் அவளை அமர வைத்து பாதங்களை நீரினுள் அமிழ்த்தியவன் , அவள் கண்ணீரை துடைத்து ‘ அழாதே பேபி ‘சமாதானப்படுத்தினான் .அவள் முகத்தில் படிந்திருந்த கரியையும் தண்ணீரால் துடைத்தான் .பின் சரண்யாவிடம் அழைத்து சென்று மருந்திடுமாறு கூறிவிட்டு போனான் .

” மாது நாளைக்கு எதற்கு வருகிறார்  தெரியுமா ..? ” இனிய பால்ய நினைவுகளில் மூழ்கியிருந்த சஹானாவை கலைத்தாள் ரம்யா .

” எங்கள் இருவரின் திருமணத்தையும் நிச்சயம் செய்ய ”
” என்ன நிஜம்மாகவா …? ‘

” ஆமாம் .இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது எதற்கு வருகிறார் ? இதற்குத்தான் . ஏற்கனவே போனிலேயே எல்லாம் பேசி முடித்துவிட்டேம் .இங்கே தாத்தா , பாட்டி முன்னால் முறையாக பேச போகிறோம் “

” போனில் பேசுவீர!களா …? இதைக் கேட்க சஹானாவிற்கு குரலே வரவில்லை .

” பேசுவோமா ..? தினமும் பேசுவோம் ..? பிறகு எங்கள் காதல் எப்படி வளர்ந்த்து என்கிறாய் .போனிலும் , வீடியோ சாட்டிங்கிலும்தான் .உனக்கு ஒன்று தெரியுமா ..? மாதுவிற்கு நம் கிராம்மே நினைவிலில்லை .சஹானா என்றால் அப்படின்னா …என்கிறார் .உன்னைத் தவிர எனக்கு அங்கே எந்த நினைவுமில்லை என்கிறார் .சிறுவயதில் நாம் மூவரும் எப்படி விளையாண்டிருக்கிறோம் .இவரை பாரேன் …” கூடை கூடையாக கனலை வாரி தட்டிவிட டு நிதானமாக நடந்து போனாள் ரம்யா .

” அம்மா தீபாவளி முடியும் வரை நாம் இங்கிருந்துதான் ஆகவேண்டுமா ..எனக்கு ஆபிஸ் வேலை இருக்கிறதே .இன்றே கிளம்புவோமா ..? ” சரண்யாவிடம் கேட்டுவிட்டு நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டாள் . 

இவர்கள் திருமண நிச்சயத்தை பார்க்கவா நான் இங்கு வந்தேன் ..? அதெப்படி சஹானான்னா என்னதுன்னு கேடகிற அளவு அவன் என னை மறப்பான் …?

ஆமாம் அவன் அமெரிக்கா போய் பத்து வருடங்களாகி விட்டது .எப்போதோ கூட விளையாடிய சிறு வயது தோழியை அவன் எப்படி நினைவில் வைத்திருப்பான் ..? ரம்யா தொடர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருப்பதால் அவள் நினைவு இருக்கிறது .நான் …பைத்தியம் போல் நினைவில் வைத்திருப்பது போல் அங்கே அந்த வெளிநாட்டின் பகட்டையெல்லாம் தாண்டி என் நினைவோடு இருப்பானென நினைப்பது பைத்தியக்காரத்தனமில்லையா ? …

மாதவன் தன் தாய் ,தந்தையோடு வந்து இறங்கிய போது ,வெளியே எட்டியே பார்க்காது அடுப்படியினுள்ளேயே அடைந்து கொண்டாள் .காபி கொடுக்க சரண்யாவை அனுப்பி வைத்தாள் .

” ஹலோ அத்தை எப்படி இருக்கீ்ங்க …? ” வெளியே அவன் சரண்யாவை விசாரித்த குரலுக்கு உள்ளே இவளுக்கு சிலிர்த்தது .அம்மாவை ஞாபகம் வைத்திருக்கிறானா ..?

வெளியே போகத் துடித்த பாதங்களை தரையில் அழுத்தி ஊன்றி நின்றபடி பலகாரங்களையும் அம்மாவிடமே கொடுத்தனுப்பினாள் .

” அன்னைக்கு நாம் சாட் பண்ணியபோது …” ரம்யா அவனிடம் ஏதோ கொஞ்சிக் கொண்டிருந்தாள் .சகோதரர்கள் ஒருவரோடு ஒருவர் ஆவலுடன் பேசிக் கொண்டிருந்தனர் .

” உமா நீங்க மாடியில் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ” கமலா அவர்களை மாடிக்கு அனுப்பினாள் .மூவரும் மாடியேறும் ஓசை கேட்க , கட டுப்படுத்த முடியாமல் மெல்ல எட்டிப் பார்த்தாள் .உமாவும் , அவள் கணவன் முரளியும் முன்னால் போக பின்னால் ஏறிக் கொண்டிருந்தான் மாதவன் .

நெடு நெடுவென்ற அந்த உயரத்தையும் கம்பீரத்தையும் பின்னாருந்தே ரசித்துக் கொண்டிருந்த போது திடீரென நின்று திரும்பினான் .அடர்த்தியாய் நெற்றி படிந்த முடியிலும் , கூர் மூக்கிலும் , மேலுதட்டை மறைத்த அடர்ந்த மீசையையும் ஒரே ஒரு விநாடியில் படம் பிடித்து நெஞ்சுக்குள் பதித்துக் கொண்டவள் மீண்டும் தன்னை மறைத்துக் காண டாள் .

திடீரென திரும்பி விட்டானே ..? பார்த்திருப்பானோ ..? இல்லை அப்படி தெரியவில்லை .உடனே மேலே ஏறிவிட்டானே .அப்படியே பார்த்திருந்தாலும் அடுப்படியிலிருந்து தலையை நீட்டுவது யாராவது வேலைக்காரியாய் இருக்குமென நினைத்திருப்பான் விரக்தியுடன் நினைத்துக் கொண்டாள் .

” இதோ பாருங்க செல்லம் கம்பி மத்தாப்பு கொளுத்திட்டு இந்த வாளிக்குள்ளே போட்டுடனும் சரியா ..? ” சேகருக்கும் ,பவித்ராவிற்கும் அவன் விளக்கிக் கொண்டிருக்கையில் மீண்டும் இவளுக்கு சிலிர்த்தது .

” இந்த டிஷ் ரொம்ப ருசியாக இருக்கிறது அத்தை .நீங்கள் செய்தீர்களா ..? “

” இல்லை தம்பி என் மகள் சஹானாதான் செய்தாள் ” சரண்யா சொல்ல , சிறு படபடப்புடன் இவள் காத்திருக்க ஒரு ” ஓ ” வுடன் அவன் முடித்துக் கொண்டான் .கை நிறைய நீரை பிடித்து எதற்கா முகம் கழுவினாள் சஹானா .

குலதெய்வம. கோவிலுக்கு எல்லோரும் புறப்பட தயாரான போது அதனை எப்படி தவிர்ப்பது என யோசித்தாள் .வாசலில் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியை தாத்தா தங்க பாண்டி கொண்டு வந்து நிறுத்தவும் இதில் யாருக்கும் தெரியாமல் ஏறுக் கொள்வோமென முடிவு செய்தாள் .

எத்தனை கார்கள் இருந்தாலும் வெளியே போகும் போது இந்த மாட டு வண்டியில் போவது தங்கபாண்டிக்கு மிக பிடித்த விசயம் அதனை அவர் ஒரு கௌரவ சின்னமாக கருதுவார் .வண்டியும் அவரே ஓட்டுவார் .பாரின் காரில் போயே பழகிய அவர்கள் யாரும் இதில் ஏறப்போவதில்லை .இதனை நினைத்து வாசலில் வரிசையாக நின்ற கார்களை கடந்து வேகமாக உள்ளே ஏறி அமர்ந்து கொண்டாள் .துணைக்கு சேகரும் , பவித்ராவும் .

” மாம் ஒரு சேன்சுக்கு இதில் போய் பார்த்தால் என்ன …? ” மாதவன் உமாவிடம் கேட்கும் சத்தம் கேட்க இவளுக்கு திக்கென்றது .

” குறுக்கு ஒடிஞ்சிடும் .நான் வரலை .நீ வேணும்னா போடா …” என்ற உமாவின் குரலை கேட்டதும் நாம் இறங்கி விடுவோமென சஹானா இறங்க முயல்கையில் குறுக்கே வண்டியை பற்றியது அந்த வலிய கரங!கள் .

” அப்படி உள்ளே நகர்ந்து உட்கார் …” உத்தரவு போல் அவன் குரல் .

வேகமாக முன்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள் .அவனும் உள்ளே ஏறி அமர்ந்தான் .இருவரிக்குமிடையே பவித்ராவை அமர்த்திக் கொண்டாள் .தங்கபாண்டி காளைகளை முடுக்க வண்டி ஓட ஆரம்பித்தது .பேரனிடம் பேசியபடி தாத்தா வண்டி ஓட்ட வண்டி குலுங்கி குலுங்கி செல்ல துவங்கியது .

” பத்து வருசம பாக்கலைன னா் இப்படி என்னை மறந்துட்டீங்களே …? நாம் அப்படியா பழகினோம் …? ” திடீரென அவன் கேட்க இவள் திடுக்கிட்டாள் .தலையை குனிந்தபடி அவள் திருதிருக்க …” தாத்தா உங்களைத்தான் …” என்றான் .

ஹப்பா ..என்னையில்லையா …பெருமூச்சு விட்டாள் ்ஆனால் தீராத ஏக்கம் இருந்த்து அதில் .அருகிலிருந்த பவித்ராவிடம் பேச்சு கொடுத்தபடி அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான் .நன்றாக நகர்ந்து சஹானாவை உரசுவது போல் அமர்ந்து கொள்ள, அப்பப்போ தொட்டுக் கொண்ட தோள்களின் நுனிகள்  தேன் தடவிய தீத்தீண்டல்களை அவளுள் உண்டாக்கியது .

நீ யார் ..? என்று ஒரு கேள்வி கூடவா கேட்க மாட்டான் …? ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டாள் .

கோவிலில் கற்பூரம் ஒற்றும் போது அவளருகில் நின்று தொட்டு கும்பிட்டான் .தெப்பத்தில் கால் கழுவும் போது அவளருகில் நின்றிருந்தான் .பிரகார வலம் வரும்போது அவள் பின்னால் வந்தான் .சர்க்கரை பொங்கல் இலையை அவள் உள்ளங்கையில் தன் கரங்களை பதித்தபடி ் வைத்தான் .ஆனால் இந்த தருணங்களில் எந்த ஒரு நிமிடத்திலும் அவளிடம் பேசவில்லை .

முகத்தையாவது பார்த்தானோ என்னவோ …? சஹானாவிற்கு தெரியவில.லை .ஏனெனில் அவள்தான் அவன் கைநகத்தை தாண்டி தன் விழிகளை உயர்த்தவே இல்லையே .

விடிந்தால் தீபாவளி .பலகார வேலைகளை முடித்து விட்டு , அடுப்படியை கழுவி துடைத்தாள் ் , சஹானா. .சரியாக துடைக்காத தரையில் மாதவன் வருவதைக் கண்ட சஹானா ” அத்தான் பார்த்து ..தரை காயவில்லை .வழுக்கி விடப் போகிறது …” எச்சரித்தபடி எழுந்தாள் .தரை வழுக்க அவன் தடுமாறினான் . வேகமாக அவனை பிடிக்க வந்த சஹானாவும் தடுமாற இப்போது அவளை பற்றி நேராக நிற்க வைத்தான் மாதவன் .

தன் தோள்களிலும் , இடையிலும் அழுந்தியிருந்த அவன் கரங்களை பிரமிப்புடன் உணர்ந்தபடி நின்ற சஹானாவிடம் …” அத்தானா ்..? ஒரு வழியாய் உறவுமுறை ஞாபகம் வந்துவிட டது போலவே …” ஆட்காட்டி விரலால் அவள் மூக்கு நுனியை வருடியபடி கேட்டான் .

” என்ன ..? என்ன சொல்கிறீர்கள் …? ” தடுமாறியபடி அவன் விழிகளை நோக்கியவள் …அந்த விழிகளில் கலந்து ஆழமாக சுழன்றபடி எங்கோ பயணப்பட ஆரம்பித்தாள் .

” மாதவா …மாதவா …” முன்பே சிலமுறை உமாவின் குரல் ஒலித்திருக்க வேண்டும் .ஆனால் இப்போதுதான் இவர்கள் இருவருக்கும் கேட்டது .” இதோ வர்றேம்மா ” அம்மாவிற்கு இங்கிருந்தே பதில் கூறிவிட்டு , தரையை துடைப்பத்ற்காக இடுப்பில் அள்ளி சொருகியிருந்த சஹானாவின் புடவை தலைப்பை கீழே எடுத்து விட்டான் .” வெளியே வா ..பேச வேண்டும் ” என றுவிட்டு போனான் .

வெளியே ஏதேதோ கசகசவென அனைவரும் பேசிக் கொண்டிருக்க சஹானாவோ வேறு ஏதோ ஒரு கிரகத தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் .அவள் அத்தான் அவளை மறக்கவில்லை .இந்த நிகழ்வுகள் அதைத்தானே சொல்கறது .தன்னைத்தானே அவள் நிலைப்படுத்திக் கொண்டு வெளியே வந்த போது …

” உமா நீ முதல்ல நிச்சயதார்த்த தேதியை சொல்லு …” சகாதேவன் தங்கையிடம் கேட்டுக் கொண்டிருந்தான் .

முகத்தில் வாங்கிய அறையாய் இந்த பேச்சு தாக்க அவசரமாக மாடியேறி வந்து மொட்டைமாடியில் இருண்ட வானத்தை பார்த்படி நின்றாள் சஹானா .

இதோ இன னும் சிறிது நேரத்தில் ரம்யாவிற்கும் , மாதவனுக்கும் நிச்சய தேதி குறிக க போகிறார்கள் . இதனால்தானே நான் ஒதுங்கி ஒதுங்கி போனேன் .எப்படி ஒரு பலவீனமான நேரத்தில் என்னை மறந்தேன் ..? புரியாமல் கண்கள் வடிய வானை வெறித்தாள் .

” என்ன நினைத்து இப்படி ஓடி ஓடி வந்து ஒளிந்து கொள்கிறாய் ..? ” மாதவனின் குரல் .

” நிச்சய தேதியை முடிவு செய்து விட்டீர்களா ..? என்றைக்கு ..? ” கண்ணீரை மறைத்துக் கொண்டு கேட் டாள் .

” ம் …இருபதாம் தேதி .இன்னும் ஒரு வாரம் இருக்கிறது .”
” வாழ்த்துக்கள் .நாங்க நாளைக்கு ஊருக்கு போய்விடுவோம் .இருபதாம்தேதி எனக்கு ஆபீசில் லீவ் கிடைக்குமோ ..என்னவோ ..அதுதான் இப்போதே வாழ்த்துகிறேன் ” வேகமாக கீழே இறங்க போனவளின் கைகளை அழுத்தி பிடித்தான் .

” ஆபிசில் லீவ் கிடைக்காதா ..?பொண்ணு ் இல்லாமல் நிச்சயம் எப்படி பண்ணுவது ..? ” 

காதில் விழுந்த்து சரியானதுதானா ..? காதுகளை தேய்த்து விட்டுக் கொள்வோமா ..? சஹானா யோசித்த போது ” அதை நானே செய்கிறேன் ..” என்ற மாதவன் அவள் இரு காதுகளையும் தன் இரு கைகளாலும் பரபரவென தேய்த்தான் .

” அடுத்த வாரம் உனக்கும் எனக்கும். நிச்சயதார்த்தம் .திருமணம் அடுத்த மாதம் .திருமணம் முடிந்ததும் என்னோடு அமெரிக்கா வருகிறாய். இப்போது காதில் விழுந்த்தா ..? ” அவன் கைகள் இப்போது காதுகளை மென்மையாக வருடியபடி இருந்தன.

நம்பமுடியாமல் கண்களை அகல விரித்து அவனை பார்த்தவள் ” அப்போது …ரம்யா …???”

” அவளுக்கென்ன …?”

” நீங்கள் ..இருவரும்தான் ..காதலிப்பதாக …கல்யாணம் முடிக்க போவதாக…”

” சொன்னாளாக்கும் …நீயும் நம்பினாயாக்கும் …” கோபம் தெரிந்த்து அவன் குரலில்.

” சஹானான்னா ..யாருன்னு நீங்க கேட டதாக கூட …”

” சொல்லியிருப்பாள் …நான் ரம்யா பேசுறேன னு அவள் சொன்னதுமே …சஹானா எப்படி இருக்கிறாள்னுதான் அவள்கிட்டே கேட்டேன் .” 

ஓ..பொறாமை ..ரம்யாவின் திட்டம் இப்போது சஹானாவிற்கு புரிந்த்து .தெளிவான அவள் முகத்தை பார்த்ததும் ” ஒரு வழியாக எல்லாம் புரிந து விட டது போல ..்” கிண்டலாக கேட்டான் .

” ம் …”என புன்னகைத்தவள் “ஆனால் சகாதேவன் பெரியப்பா அவ்வளவு சீக்கிரம் இதற்கு சம்மதிக்க மாட்டாரே .்” கவலையாய் கூறினாள் .

” எல்லாம் சம்மதிப்பார் .கீழே நமது திருமணத்திற்கான பத்திரிக்கை மாடலை அவர்தான் எழுதிக் கொண்டிருக்கறார் .ரம்யாவின் உதவியோடு …”

” என்ன ..? இது ..்எப்படி …! ” ஆச்சரியம் தீரவில்லை சஹானாவற்கு .

” சிம்ப்பிள் …எங்கள் பங்கிற்கு இந்த சொத்தை விற்றால் வருகின்ற பங்கினை அவர்பளே எடுத்துக் கொள்ளலாம் என்றேன் .பஞ்சாங்கத்தை எடுத்து நம் திருமணத்திற்கு நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார் “

” என்னது …உங கள் பங்கையும் அவர்களுக்கே தரப்போகிறீர்களா ..?அதன் மதிப்பு தெரியுமா ..? கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் “

” உனக்கு முன்னால் இந்த லட்சங்களெல்லாம் எனக்கு லட்சியமில்லை கண்ணே …என்று இந்த இடத்தில் நான் வசனம் பேச வேண டுமா ..? “

” ப்ச் …விளையாடாதீர்கள் அத்தான் .”

” இல்லை சஹி ..நிஜம்தான் இதற்காகத்தான் அவர்கள் என்னை மாப்பிள்ளையாக்க நினைத்தார்கள் .இப்போது இதை நான் விட்டுக் கொடுக்கா விட்டால் நம்மை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் .பணம் நாம் சம்பாதித்து கொள்ளலாம்மா .இதைவிட நம் அன்பு பெரியதில்லையா ..”

” அத்தை …உங்கள் அம்மா …நம் திருமணத்திற்கு ்…?! “

” உன்னை திருமணம் செய்ய வேண்டுமென்ற காரணம் சொல்லித்தானே அவர்களை இங்கே அழைத்து வந்திருக்கிறேன் …”

பதில் பேசாமல் கண்களால் தன்னவனை விழுங்கியபடி நின்றாள் சஹானா .கீழே சிறுவர்கள் விட்ட ராக்கெட். அவர்களின் தலைக்கு மேல் பறந்து போய் மேலே வெடிக்க மாதவன் , சஹானாவை இழுத்து அணைத்தான் .

அதில் நெகிழ்ந்து கரைந்தபடி ” என்னத்தான் பண்ணுகிறீர்கள் ..? ” கிண்டலாய் கேட்டாள் சஹானா .

” நீ வெடின்னா பயப்படுவாயே பேபி .அதுதான் உன்னை பத்திரமாக பாதுகாக்கிறேன “

” பயப்படுவேனா …அது எப்போ ..? சின்னப்பிள்ளையா இருக்கும் போது .இப்போ நூறு வாலாவை நுனி விரலால் போடுவேனாக்கும் “

” ஓ…அப்படியா பேபி .ஆனால் நான் பத்து வருடமாக அமெரிக்காவில் இருந்து விட டேனா ..? இப்போது வெடின்னா எனக் கு பயம்மா இருக்கு .என்னை காப்பாற்று பேபி ” என்றபடி மேலும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் .

புஸ்வானங்களும் , மத்தாப்பூக்களும் மொத்தமாக சஹானாவினுள் சிதற தொடங்க , வண்ணமயமான அவர்கள் வாழ்க்கைக்கு கட்டியம் கூறுவது போல் தலைக கு மேல் வண்ணங்களை சிதறவிட்டன பட்டாசுகள் .

Leave a comment

14 COMMENTS

  1. காதல் இனிப்பு தீபாவளியை தித்திக்க வைக்கிறது அக்கா… அருமை

LEAVE A REPLY