This summary is Written by Gaanapriya Mohan

 

இன்று சரஸ்வதி பூஜை . கடந்த இரு நாட்களாக சரஸ்வதி ஆவஹனம் எல்லா இடத்திலும் நடக்கிறது. நானும் பல சரஸ்வதிகளை ஆவாஹனம் செய்ய போகிறேன். இந்த பதிவில், மூன்று சரஸ்வதிகளின் ஆவாஹனம் . 

முதல் ஆவாஹனம் , ஸ்ரீநிவாஸ்! (இவரின் நாவினில், சரஸ்வதி மட்டும் அல்ல , மன்மதன் ரதியின்  போலும். சமீபத்தில், ஒரு பதிவில் மற்றுமொரு ரசிகரும் கூறியிருந்தார் , ” Romance thy name is Srinivas” ) இசை வாழ்வில் ஸ்ரீனிவாசின் இன்னுமொரு அற்புத தொகுப்பு, “ஸ்ரீஷாவின் சிறகடிப்பேன் .” இந்த இசை தொகுப்பில் ஸ்ரீஷாவின் முயற்சி நிச்சியம் பாராட்ட வேண்டிய ஒன்று. 

ஸ்ரீஷா . . யார் இந்த இளம் பெண் ? பாரதியாரின் வரிகளில் தோய்ந்து போய், பாரதியாருக்கென, ஒரு தனி செருக்கேடு வெளியிட்ட தங்க தாரகை. கோவை சார்ந்த இளம் புயல்! நிச்சயம் இவளுள் சரஸ்வதி தேவி குடி கொண்டு தான் இருக்கிறாள். தனது பதினாறு வயதிற்குள் ” புதிய பாரதி ” என்றொரு இசை தனிசெருக்கேடு வெளியிட்ட புதுமை பெண்! சுடுதல், பரதம், பாடு என பற்பல முகங்கள் கொண்ட சக்தி மங்கை. இவளின் சமீபத்திய செருக்கேடு “சிறகடிப்பேன்” . இளம் பெண்ணின் கனவுகள் தாங்கிய செருக்கேடு.

இந்ததொகுப்பு, ஸ்ரீநிவாஸ் இசையில் வெளியாகி உள்ளது. ஒரு இளம் பெண்ணின் கனவுகளை மதன் கார்கி தன் வரிகளில் கூற, வரிகளுக்கு தனது இசை மூலம் உணவூட்டி இருக்கிறார் ஸ்ரீநிவாஸ். ஒரு இசை அமைப்பாளராய் அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீநிவாஸ். 
இந்த தனிப்பட்ட இசை செருக்கேடில் பல இசை ஜாம்பவான்கள் ஸ்ரீஷாஉடன் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

முதல் பாடலை, நாம் காணவிருப்பது , “காலம் மாறி போயாச்சே ” ஒரு தாத்தாவிற்கும் பேத்திக்கும் இடையிலான சம்பாஷனை. காலங்கள் எப்படி மாறி இருக்கிறது என்பதிற்கான ஓர் அழகிய பதிவு..

மீண்டும் ஒரு ஆவாகனம், சரஸ்வதி தேவி  மட்டுமா,அனைத்து தெய்வங்களும் குடி இருந்த குடி இருக்கும், ஒரு மேதை , மாமன்னன் விஸ்வநாதன் அவர்கள்!  மாமன்னரின் குரலில் , அவர் கம்பீரமாய் வீற்றிருக்கும் போஸ் , ஆர்மோனியத்துடன், பின்பு செல்வி ஸ்ரீஷா , அவ்வபோது திரையில் தென்படும் மதன், எல்லாமே அற்புதம்.  முதல் பாடலை இங்கு பதிவிடுகிறேன், உங்களுக்காக..

பின்பு ஒவ்வொன்றாய் இந்த ஒரு வாரம் கேட்டு ரசிப்போம் .

இசை மாமன்னருக்கு சமர்ப்பணம் செய்திருக்கும் குழுவினருக்கு ஒரு பெரிய சபாஷ் !

சில இசைஒத்திசைவு கேட்கும் தருணத்திலே நமக்கு தோன்றிவிடும் உணர்வுகள், பொக்கிஷமானவை, அழிக்க படமுடியாதவை… அவ்வாறு சில உணர்வுகள் பிறக்கும், இந்த படலை கேட்கும் பொழுது…

நீங்களும் உங்கள் கற்பனை வானில், சிறகடியுங்கள்

IMG-20151021-WA0012

https://www.youtube.com/watch?v=922IEXhpi_c

Leave a comment

LEAVE A REPLY