This summary is Written by Gaanapriya Mohan
எழுத்துக்கு அரசி இவர் . இவரின் பொற்கரத்தில்  சரஸ்வதி தேவி அலங்காரமாய் அமர்ந்து இருக்கிறாள் . குடும்பம், கலாச்சாரம், காதல், பெண்மை , கம்பீரம் இப்படி பல மொழிகள் பேசும் இவரின் தமிழ் மொழி. எழுத்தாளர், கவிதாயினி, அழகான மனைவி, அன்பான தாய், எல்லோரையும் அரவணைக்கும் அருமை பெண், ஊக்குவிக்கும் தோழி , இப்படி பல முகங்கள் உள்ளது இவரை உருவபடுத்த. நம் போன்ற ரசிகர்களுக்கோ, இவளுடன் தினம் தினம் கதைப்பது போல் இருக்கும், ஒவ்வொரு புத்தகத்தை படிக்கும் பொழுதும். (எனக்கு எப்பொழுதும் உண்டு. இது நாள் வரை ஒரு முறை கூட இவரை நேரில் பார்த்ததில்லையே என்று ஏங்கியது இல்லை. கபிலன், பிரபாகரன், மாலினி இப்படி தினமும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன் இவரோடு கதைத்து கொண்டே தான் இருக்கிறேன்)
ஒரு எழுத்தாளர் தன வாழ்வில் தினம் தினம் எதிர்கொள்ளும் தருணங்களையும் நம்மோடு அவ்வபோது பகிரும் பக்குவபட்ட மனிதர் இவர். எண்ணங்கள், எதிர்வினைகள், எதிர்மறை கருத்துக்கள், உணர்வுகள் இப்படி அனைத்தையும் தனது பேனாவின் மையாக்கி சீர்வர படைப்புக்களை பிரசவிக்கும் படைப்பாளி. காற்றில் கலைந்துபோகும் நமது உணர்வுகளை கூட தன கரங்கொண்டு கல்வெட்டாய் மாற்றும் திறன் கொண்ட இவரின் கரத்தில் சரஸ்வதி குடி இருப்பது நிஜம் தானே ? ? 
இதோ, எனது பதிவின் மூலம், இரண்டாம் தின ஆவஹனம் சரஸ்வதி தேவியை . . .!  
திருமதி முத்து லக்ஷ்மி ராகவன் – எழுத்தரசி , கவிதாயினி , கதை எழுதுபவர் , தோழி, அன்னை , ஷக்தி இப்படி பல மகன்கள் கொண்டவர். பெயரில் லக்ஷ்மி, நடத்தையில் ஷக்தி , வாக்கினில் சரஸ்வதி ! 🙂 நவராத்ரியின் நாயகி 🙂 
பின்குறிப்பு : இது நிச்சயம் அவர் கற்று கொடுத்து எழுதவில்லை. நான் ரசிக்கும் ஒரு பெண்மணியை , எனது மானசீக அன்னையை , எனது கோணத்தில், அவர் பால் கொண்ட எனது அன்பு / காதல் எப்படியோ சொல்லிகொள்ளுங்கள், எனது வார்தைகேர்ப்ப எழுதி இருக்கிறேன். ஆதலில் அவர் தலையை உருட்டாதீர் ! ! 

Leave a comment

3 COMMENTS

  1. Arumaya velipaduthi irukka gaana. Naan ivarai patri ninaikkum pozhudhu ippadithan ninaippen.Ovoru navol padikkum pozhudhu thondrum unarvugal ivai. Ennal ivvalavu azagaha velipadutha theriyavillai.Thanks pa.Unmaiyelaye ivargal viralgalil sarasvathi kudi irukkiral.

LEAVE A REPLY