This article is written by Ananthan Amirthan .HE shared  about Bharathiyar the genious  tamil poet with us .Bharathi was an wonderful man /.Here some of his interesting love  experience in his poem with us

பாரதியார் பற்றிய ஒரு சுவராசியமான சம்பவம். முழுசா படிச்சுப் பாருங்க…

நவராத்திரிக்காக அவர் பாடிய மூன்று காதல்கள் பாடல்களில்
ஒரு அருமையான சூட்சுமம் இருக்கு.

இந்தக் காதல் பாடல்கள் தோன்றிய விதம், பாண்டிச்சேரியில், தங்கம்மாள், யதுகிரி (ஸ்ரீநிவாசாச்சாரியார் மகள்) செல்லம்மா மூவருடனும் கடற்கரையில் பாண்டு வாத்தியம் பார்க்கப் போயிருந்தார்கள்.

அதன் ஓசைக்கேற்ப மூவரும் ஆளுக்கொரு பாடல்கள் கேட்கிறார்கள். முதலில் கேட்டது தங்கம்மா.

அப்பா, இந்த மெட்டில் நீ சரஸ்வதியைப் பற்றி பாடேன்…?
அடுத்த மெட்டைக் கேட்டு விட்டு யதுகிரி, இந்த மெட்டுக்கு லட்சுமியைப் பற்றி பாட முடியுமா?
அதற்கடுத்த பாண்டு வாத்திய மெட்டைக் கேட்டு, கல்கத்தா காளி மீது பாடினால் நம் பிணி போகும் அதில் பாடுங்களேன் என்று செல்லம்மா கேட்க,
மறுநாள் யதுகிரி வீட்டில் கொலுவுக்கு முன்னதாக தான் இயற்றிய மூன்று பாடல்களையும் மூன்று மெட்டுகளில் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்கிறார்.

இதில் என்ன சூட்சுமம்…?
பாரதி தன் மகளை சரஸ்வதி போல் வளர்க்க எண்ணி அப்படியே மனதிற் கொள்கிறார்.
யதுகிரி அம்மாளின் அப்பா பெரிய செல்வந்தர். (மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார். இந்தியா பத்திரிக்கையின் நிறுவனர். பல தேசபக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்) .

நிறைவாக காளியைப் பற்றி கேட்டவர் தான் செல்லம்மா. தன் காளியாக செல்லம்மாவைத் தான் கொண்டாடினார்.

“அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவியடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!”

இப்படித்தான் தன் காதல் மனைவி செல்லம்மாவை பாரதி பார்த்திருக்கான்.

‪#‎பாரதிடா‬….

Leave a comment

LEAVE A REPLY