நவராத்திரி வந்தாலே பெண்களின் முகம் பிரகாசமாகி விடும். விதவிதமாக பொம்மைகள் வாங்கி தங்கள் கற்பனைத் திறன் கொண்டு அவற்றை விதம் விதமாக அலங்கரிப்பது, பாடுவது, கோலம் போடுவது, கை வேலை அலங்காரம், தெரிந்தவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வெற்றிலைப் பாக்கு கொடுப்பது என்று கொண்டாடி மகிழ்வார்கள்.

 

நவராத்திரியின் போதுதான் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல், எப்பொழுதெல்லாம் எக்ஸிபிஷன் வைக்கிறார்களோ, அப்போது அங்கேபோய் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் போதோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது வெளியூர் அல்லது வெளிநாடு போகும் போதோ அங்குள்ள சிறப்பான பொம்மைகளை வாங்கி வரச் சொல்லலாம்.

53

நேரம் கிடைக்கும்போது செருப்பு தைப்பவர், டெய்லர் போன்றவர்களிடம் சிறிய அளவில், உங்களுக்கு வேண்டிய குட்டி செருப்பு, குட்டி டிரஸ் போன்றவைகளை தைத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

கொலுவுக்கு வாங்கியதை கொலு முடிந்த பிறகு வீட்டு உபயோகத்திற்கும் வைத்துக் கொள்வது போல் பிளான் செய்து வாங்குங்கள். உதாரணத்திற்கு, செல்ஃபோன் ஸ்டாண்ட் வாங்கினால் அதை கொலுவிற்குச் சேராக உபயோகித்துக் கொள்ளலாம்.

வருடம் முழுக்க, பொம்மைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கான பொம்மைகளை, உதாரணமாக கிருஷ்ண ஜெயந்திக்குக் கிருஷ்ணன் பொம்மை, விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் போன்றவைகளை வாங்கிச் சேர்க்கலாம்.

IMG_0031

மரப் பொருட்கள் செய்யும்போது விழும் சிராயைப் பொடித்து, பச்சைக் கலர் பொடியைச் சேர்த்தால் சூப்பரான புல்வெளி கிடைத்துவிடும்.

எப்போதெல்லாம் கடற்கரைக்குப் போகிறீர்களே அப்போதெல்லாம் மணல், கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொள்ளலாம். தெப்பக்குளத்துக்கு உதவும்.

மண் பொம்மைகளை காதி, பூம்புகார் போன்ற இடங்களில் வாங்கலாம்.

கொலுவிற்கு லைட் அலங்காரம் செய்தால் கிராண்டாக இருக்கும். விதவிதமான மாடல்களில் லைட் அலங்காரம் செய்யலாம்.

யானை, குதிரை போன்ற பொம்மைகளை மொத்தமாக வாங்கி, யானைப் படை, குதிரைப்படை என்று வரலாறுகளைக் கண்முன் கொண்டு வரலாம்.

உப்புக் காகிதம் வாங்கி, நடுவே கறுப்பு சார்ட் பேப்பரை வெட்டி, ரோடு போல் அமைத்தால் இயற்கையான மணலும், ரோடும் கண்ணைப் பறிக்கும்.

பிஸ்தா பருப்பைத் தின்று விட்டு அதன் ஓட்டைத் தூக்கிப் போடாமல் பத்திரப்படுத்தி மணலில் போட்டால் மிக அழகாக இருக்கும்.

kolu

கை வேலை செய்ய முடியவில்லையே என்று வேலைக்குப் போகும் பெண்கள், இனிமேல் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கொலுவை அலங்கரித்து விடலாம். பழைய புடவைகளை வீணாக்காமல் சேர், ஸ்டூல் போன்றவைகளின் மீது விரித்து அதில் செட் பொம்மைகளை வைக்கலாம்.

தேங்காயில் உள்ள நாரை எடுத்து பெரிய பாசி மணியில், க்ளு தடவி அதில் நாரை ஒட்டி செயற்கைத் தேங்காய் செய்து கொள்ளலாம்.

முழு கொட்டைப்பாக்கு, மஞ்சள் போன்றவற்றில் கண், காது, மூக்கு வரைந்து குட்டி குட்டி பொம்மைகளாகச் செய்யலாம். வித்தியாசமாக இருக்கும். செலவும் குறைவுதான்.

IMG_0186

கிறிஸ்துமஸ் சமயத்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் கட்ட குட்டிக் குட்டி பொம்மைகள் விற்பார்கள். அந்த சமயத்தில் அந்த பொம்மைகளை நிறைய வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

தெர்மோகோலை வைத்தும் கொலுவை விதவிதமாக அலங்கரிக்கலாம். வாழைத் தண்டை நறுக்குவது போல் தெர்மகோலை வட்டமாக நறுக்கி, லேசான பிரௌன் கலர் அடித்து குண்டூசியால் சிறு துளைகள் போட்டால் அருமையான மேரி பிஸ்கட் ரெடி. தெர்மாகோலை உருண்டையாக்கி மஞ்சள் கலர் அடித்தால் லட்டு கிடைத்துவிடும்.

 

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY