This song is shared to us by Sathya GP 

 

ஜனவரி மாதம், வருடம் 2009

அப்போது நான் வங்கியில் பணிபுரியும் காலகட்டம். மூன்றாவது காலாண்டு முடிந்து ஆங்கிலப் புத்தாண்டும் கடந்து பொங்கல் விடுமுறை சமயம்.

 

ராகேஷ் ஓம் ப்ரகாஷ் மெஹ்ரா – அந்த இயக்குனரின் ‘ரங் தே பசந்தி’ என்னும் பிருமாண்டமான வெற்றிப் படத்திற்குப் பிறகு எதிர்பார்ப்புடன் அடுத்த படத்திற்கு காத்திருந்தோம். இரண்டிற்கும் ஒரே இசையமைப்பாளர் நான் மிகுந்த ஆவலுடன் ஆடியோ ரீலிசுக்கு காத்திருந்தேன். பட டைட்டிலும் செம ‘டெல்லி – 6’

 

அந்த மாதம் என்னுடைய கிரெடிட் மானேஜர் (அவர் தான் லோன்ஸ் சாங்ஷன் செய்பவர்) மீட்டிங்கில் சொன்னது நினைவுக்கு வந்தது. நம்ம மேல மத்தவங்க அதிக எதிர்பார்ர்பு வெச்சுக்குற மாதிரி நடந்துகிட்டா நாம ஜாக்கிரதையா நடந்துக்கணும். நம்முடைய இயல்பான செயல் கூட சரியில்லன்னு விமர்சிக்கப்படும். அசாத்தியம், அசாதாரணம் போன்றவை தான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று சொன்னார். அந்த வாக்கியம் ஏனோ நினைவுக்கு வந்து கிலியை கிளப்பியது.  

 

‘கனெக்ஷன்ஸ்’ ஸ்டோர்ஸில் ஆடியோ சிடிக்கு முதலிலேயே சொல்லியாகிவிட்டது.

 

15 ஜனவரி, வருடம் 2009

 

மாலை நேரத்தில் வேளச்சேரி சென்று கடைக்குள் (கனெக்ஷன்ஸ்) நுழைந்தவுடன், ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பதன் பொருளை ‘உணர’ வைத்தார் கடையில் இருந்த நண்பர். “சார், ஆடியோ வந்தாச்சு இந்தாங்க சிடி”

 

வாங்கி வீடு திரும்பும் போது வண்டி பெரும்பாலான தருணங்களில் 80 கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே இல்லை. போக்குவரத்து நெரிசலும் அதிகம் இல்லை. வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் எதிரே இருந்து GST road வரை நீளும் அந்த சாலையில் பயணிக்க… மனதில் நினைப்பு முழுதும் ‘வீட்டுக்கு போன உடனே CD தான்’ என்னும் ஒரு தியான நிலை. மனம் முழுதும் கேட்கப் போகும் பாடல்களை நினைத்தபடி ‘ஒருமுகமாய்’.

 

வீடு வந்து என் ரூமுக்குள் நுழைந்து ஏசி திருகி படுக்கையில் சாய்ந்து மியுஸிக் சிஸ்டத்தில் CD யை சுழல விட்டேன். ஒவ்வொரு பாடலும் கேட்க கேட்க உற்சாகம் துவங்கி அந்த குறிப்பிட்ட பாடலை கேட்க கேட்க மனம் உற்சாகத்தின் உச்சம் தொட்டது.

ஒரு பாடல் கேட்டவுடன் மிகவும் பிடித்துப்போனது. டெல்லி மற்றும் ஹரியானா மக்களின் பாரம்பரிய இசையும், (குறிப்பாய் பெண்கள் பாடும் ‘இசை’) மேற்கத்திய டிஸ்கோ பாணி இசை (குறிப்பாய் தாள கட்டு) ஒன்றுக்கொன்று அழகாய் கடலில் உள்ள நீரும் உப்பும் போல் இயற்கையாய் இசைவாய் ‘கடல் நீராய்’ கலந்திருந்தது.

 

அந்தப் பாடல் கேட்டவுடன் எனக்கு வந்த ஆசையே இந்த பாடலின் காட்சியைப் பார்க்க வேண்டுமென்பதே. படம் வெளியான பின் ஈகா தியேட்டரில் பார்க்க பார்க்க என் பால்ய காலத்து நினைவுகள், என் அம்மா என்னிடம் பகிர்ந்த ‘அவரது பால்ய கால நினைவுகள்’ எப்படி எத்தனை எத்தனை சொல்ல முடியா விவரிக்க முடியாத அற்புத உணர்வுகள்…   

வீட்டு மொட்டை மாடியில் வர மிளகாய் போன்ற வீட்டு பொருட்களை வெயிலில் உலர்த்தியபடி பெண்கள் பாடும் பாட்டு. இது தான் இயக்குனர் இசையமைப்பாளருக்கு சொன்ன காட்சி களம். இதற்கு (வேறு யார்) நம் இசைப்புயல் ARR ன் இசை பார்ப்போரையும் கேட்போரையும் சுண்டி இழுத்து லயிப்பில் ஆழ்த்தும் வசீகரம் கொண்ட இசையை கொடுத்தது ARR’s MAGIC” 

 

அதன் பின்பு இத்திரைப்படத்தின் ஒரிஜினல் டிவிடி வாங்கி மனம் நினைக்கும் போதெல்லாம்…

 

என்னுடைய மொபைல், சிஸ்டம், DVD, Audio CD என பாடல் கேட்க சாத்தியப்படும் அனைத்து கருவிகளிலும் சேமித்து வைக்கப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

 

17 ஏப்ரல் 2009

 

என் கிளியண்ட். அவருக்கு பூர்வீகம் குஜராத்தில் காந்தி நகர் அருகில் ஒரு கிராமம். 3 தலைமுறையாய் ஒரே வியாபாரம். சென்னைவாசியாக பல வருடங்கள். பூந்தமல்லி ஹை ரோட்டில் ஒரு பெரிய ஃபிளாட் வாங்கி அதன் கிரகப் பிரவேசத்திற்கு அழைத்திருந்தார். மாலை விருந்து. மேலே ரூஃப்பில் அனுமதி வாங்கி பஃபே வைத்து, பெரிய ஸ்பீக்கரில் பாடல்கள் என கொண்டாட்டமாய்…

 

என் நண்பரின் தாயார், அவரது மனைவி, அவரது மகள், அவரது மருமகள், அவரது பேத்திகள் என நான்கு தலைமுறை பெண்கள் ஒன்றாய் ஒருங்கிணைந்து நடனமாடி கொண்டாடிய பாடல்…    

 

பாடல் : Genda Phool …

படம் : டெல்லி 6

பாடலை பார்த்து கேட்டு ரசிக்க :

 

https://www.youtube.com/watch?v=nqydfARGDh4     

 

என்னை போன்று இசை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு கரீபியன் இசை, பிரேசில் இசை, வட இந்தியா, கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா போன்ற பகுதி மக்களின் பாரம்பரிய இசை, சுஃபி இசை என பல்வேறு இசை ருசியை காட்டி  செவியையும் மனதையும் நிறைய செய்பவர் ARR.    

 

 

Leave a comment

LEAVE A REPLY