This song is shared to us by Gannapriya Mohan

கடந்த மூன்று பதிவுகளில் மன்னரை பற்றிய எழுத்துக்கள் இருந்தது. இந்த பதிவில் இளவரசரை பற்றி – இளவரசரிடம் பற்றோடு – இளவரசரை பற்றி எழுதப் போகிறேன். 

ஸ்ரீநிவாஸ் . . இந்த பெயர் கேட்கும் தருணத்தில் அவரின் சுகமான குரலும் அழகான பாவங்களும் தான் கண் முன் விரியும் . அழகான பாடகர் மட்டும் இல்லை, உண்மையிலே, அழகு, பாந்தம் , மனிதத்துவம் கூடிய ஓர் அற்புத மனிதர். 

அவரை திரை இசைக்கு அறிமுக படுத்திய முதல் பாடல் , நம்மவர் படத்தில் (1994) மகேஷ் “சொர்க்கம் என்பது நமக்கு” … அறிமுக பாடல் என்றாலும் கொள்ளை அழகோடு வந்த குரலுக்கு மயங்காதோர் எவரும் உண்டோ ? ஸ்வர்ண லதா உடன் இணைந்து ,

“எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்” என்று ஒலிக்கும் குரலும் , “உலாவும் நிலாவில்” என்று உச்சரிக்கும் பொழுது சேரும் கமகம் , அம்மாடியோவ்.. ஒரு வரி இளவரசர், அடுத்த வரி பாடகி ஸ்வர்ண லதா பின்பு ஒரு சேர்ந்திசை , இப்படி பல நுணுக்கங்கள் கொண்ட பாடல் இது.

எனக்கு சொர்க்கம் என்பது, இவரின் குரலை என்றும் கேட்பது தான்..

படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்

ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்

உனக்கும் எனக்கும் ஆடு மாடு தேவல

உனை போல் எனை போல் கெட்டு போகல

நல்லவங்க கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது

முதல் பாடல் எவ்வளவு பிரபலமானதோ அதே போல், அவரின் அடுத்தடுத்து வந்த பாடல்களில், என் உயிரே எனும் பாடல். ஏ . அர் . ரகுமான் இசையில் வந்த பாடல் பிரபலமானது, எனக்கு பிரியமானது. என்னை உருக வைக்க கூடியது. உச்ச ஸ்தாயில் “வந்து சேர்ந்து விடு இல்லை சேர விடு இல்லை சாக விடு” என்று அவர் குரல் ஒலிக்கும் பொழுது எடுக்கும் மயிர்க்கூச்சல் ஒவ்வொரு முறையும் முதல் முறை கேட்பது போலவே இருக்கும். 

இந்த காதலில் மரணம் தான்

ஏழு நிலை

இது இல்லை என்றால் அது

தெய்வீக காதலில்லை

இந்த காதலில் மரணம் ஏழு நிலை

இது இல்லை என்றால்

அது காதல் இல்லை

உடல் மரிக்கின்ற காதல்

மரிப்பதில்லை மரிப்பதில்லை 

என் ஆருயிரே என் ஓருயிரே . . . 

உணர்வுகளோடு ஒன்றி போன இரண்டு பாடல்கள் இளவரசரின் குரலில் கேட்கும் பொழுது தோன்றும் நிலை தான் ஒரு பித்து நிலை, ஒரு மோன நிலை , ஒரு தெய்வீக நிலை.. . அந்த நிலையை அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கும் இன்னுமும் அனுபவிக்க போகும் என்னிடமிருந்து இன்னும் சில பதிவுகள் இளவரசரை பற்றி…

காத்திருங்கள் . . .!

                                                                                                                                                                                                                                                                                                                                                                              கானப்பிரியா மோகன் 

Leave a comment

2 COMMENTS

  1. arumai mohan,ilavarasar enakkum neraya pidikkum.perumbalum ivarudaya padalil naan karandhu irukkiren.vazthukal nanbarey.

LEAVE A REPLY