பல சாதனை புரிந்த மனோரமா ஆச்சி வாழ்க்கை வரலாறு - Cineulagam

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மே 26ம் தேதி 1937ம் ஆண்டு பிறந்தவர் மனோரமா. காசி குலோகுடையார் – ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக யார் மகன்? என்ற நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது அவருடைய வயது 12. நாடக இயக்குனர் திருவேங்கடம்தான் இவருக்கு மனோரமா என்று பெயர் சூட்டியவர். தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை கண்ணதாசன் 1958ல்மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே காமெடியில் கலக்கி இருந்தார் மனோரமா. தமிழகமுன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை,கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். ஜெயலலிதா,எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்கள் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார் ஆச்சி மனோரமா.

ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார். இவர் நடிகர் நாகேசுடன் இணைந்து நடித்த நகைச்சுவை படங்கள் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும். அதோடு தில்லான்னா மோகனாம்பால் படத்தில் இவர் நடித்த ஜில்லு என்ற வேடம் இப்போதும் ரசிக்க வைக்கும்.

நடிகை, குணசித்திர நடிகை, மாமியார், அம்மா, பாட்டி என பல வேடங்களில் கலக்கி இருக்கிறார். இவர் ஏற்காத வேடம் இல்லவே இல்லை. டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தாட்டாதே என்ற பாடல் இவர் பாடிய ஹிட் பாடல்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் என ஆறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கண் திறந்தது படக் கதாநாயகன்எஸ்.எம்.ராமநாதனை, மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

நடிப்பு மட்டுமில்லாது 100க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.புதிய பாதை என்ற படத்தில் நடித்தற்காக, “சிறந்த துணை நடிகைக்கான’ தேசிய விருது, 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது என மனோரமா பெற்றார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு ‘கவுரவ டாக்டர்‘ பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ்புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.

இப்போதும் தன்னுடைய படங்கள் மூலம் பலரையும் மகிழ்வித்து வரும் ஆச்சி மனோரமாவின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY