Alagana kudumpathil pugunthuvita kathal paduthum paadu .Vasaki oruvarin kanner kathai …..

 

சாய்ந்து கொள்ள தோள் கொடுப்பதற்காக இந்த பகுதியை நாங்கள்  ஆரம்பித்து இருந்தாலும் இந்த பகுதிக்கு எந்த பதிவும் வரக்கூடாது என்றே நாங்கள் விரும்பினோம்.பிரச்னைகள் இல்லாத வாசகிகள் வாழ்வுதான் எங்கள் விருப்பமும். ஆனால் தனது மிகுந்த துயரத்தை எங்கள் தோள்களில் இறக்கி வைத்துள்ளார் வாசகி ஒருவர் .இந்த பதிவுகள் தொடர கூடாது என்ற வேண்டுதலோடு அவருக்கான தீர்வு இதோ….

இந்த பிரச்சனையை ஒத்த பிரச்சனையை உடைய பிறருக்கும் இது உதவகூடும் 

 

mam, my daughter …………, B.Tech last May month completed the Course, and she was join training at trichy, at 10th june month, my family send and stay her hostel, we returned to chidambaram. 21st June she got Register Marriage at cuddalore. we are dont no. that boy is also chidambaram and she came chidambaram saturday & Sunday but dont tell anything. again we are going to trichy 2nd week of july there she tell “I love one man” we are very suffer yr age is 21 you are attend training in career, we are very shocked, she select that boy is not a good manner, similar to rowdy we are adviced to withdraw and dropout the love, she is not anything details very silent. we r immediately her training dropped and my mother is in Rajapalayam going there, 4 days we are advice to her repedidtely, anything dont tell very silent. 14th July 4.00p.m he send the Register Marraiage certificate and Marriage photo, thudthuvitom, iranthuviduvathu endru mudivu seithom en amma dont that way, andru muthal nadaipinamai irukirum mam, she went to them, vayiru thudikirathu, thungavillai, sapitavillai,she is in chennai pallavarm Now 2 months gone, still she is not good her life, she got call center job,. he did not get job. she suffer, but she telling i am fine, i have gd family,….

இந்த தோழியின் மனகுமுறலுக்கு நமது பதில் ஆறுதல்….

காதல் உணர்வுபூர்வமானது …. ..! அறிவுபூர்வமானது அல்ல ..உங்கள் மகள் காதலில் விழுந்து விட்டாள் ..அவளை மீட்பது கடினம் ..நடந்துவிட்ட திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ..சட்டப்படி அந்தப் பையன் உங்கள் மகளின் கணவனாகி விட்டான் ..உங்கள் மகளும் அவன் பின்னால் போய் விட்டாள் ..இனி இவை எதையும் மாற்ற முடியாது ……! இந்த உண்மையை ஜீரணிக்கப் பழகிக் கொள்ளுங்கள் ..காதலிக்கும்போது வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கும் ..வாழ்ந்து பார்க்கும்போதுதான் அதன் வலியும் வேதனையும் புரியும் ..உங்கள் மகள் இப்போதுதான் வாழ ஆரம்பித்திருக்கிறாள் …ஆரம்பத்திலேயே தனது சோகத்தையும் துக்கத்தையும் பெற்றவர்களிடம் மறைக்கும் சுயமரியாதை அவளுக்கு வந்திருப்பதை நீங்கள் பாராட்ட வேண்டும் ..சிறுவயதில் அவள் தவறி விழுந்து அடிபட்டால் நீங்கள் கை தூக்கி விடமாட்டீர்களா ..? இப்போதும் அதையே செய்யுங்கள் …சொல்லிக் காட்டாதீர்கள் ..எப்போதும் தாய்வீடு அவளுக்காக காத்திருக்கும் என்பதை அவளுக்கு உணர்த்துங்கள் ..எதற்க்காக சாக நினைத்தீர்கள் ….? நடைபிணமாக ஏன் வாழ வேண்டும் ..? வருவதை எதிர்கொள்ளுங்கள் ..நீங்கள் பெற்று வளர்த்த பெண் ..இத்தனை சூட்சுமமாக நடந்திருப்பதையும் ..உங்களைவிட வேறு ஒருவனை உயிராக நினைத்து அதை உங்களிடம் மறைத்துவிட்ட நம்பிக்கைத் துரோகத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ..யாருக்குமே தாங்கிக் கொள்ள முடியாதுதான் ..ஆனால் …., இதுதான் வாழ்க்கை ..! பெற்ற பிள்ளையாக இருந்தாலும் நாம் வைரக் கல்லை பரிசளித்தாலும் பாறாங்கல்லைத்தான் தூக்கி தலையில் போடுவார்கள் .. நிதரிசனம் இது ..அதற்காக உயிரை விட நினைப்பதா ..? மனம் உடைந்து விடுவதா ..? வேண்டாம் ..பழையபடி இயல்பாக வாழ முயற்சி செய்யுங்கள் ..

Leave a comment

1 COMMENT

  1. பத்மா சொல்றதுதான் சரி மேடம். கவலைப்படாதீங்க நாம உயிரைக் கொடுத்து வளர்க்கிறோம். அவங்க இப்படிப்பட்ட முடிவு எடுக்கும் போது நமக்கு நம் உயிரே துடிக்கும் தான். ஆனால் நடந்துவிட்ட நிகழ்வை யாராலும் மாற்றமுடியாது. இப்பொழுது அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கென்று ஒரு குழந்தை பிறந்து வளர்ப்பார்கள் பார். அப்பொழுது தெரியும் விடுங்க மேடம். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கங்க. குடும்பத்தில் உள்ள மற்றவர்களை பாருங்க. முடிந்தால் எங்காவது கோவிலுக்கு செல்லுங்கள். திருமணம் ஆன பெண்ணையும் எதுவும் சாபமிடாதீர்கள். ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால். எனக்கும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அதனால்தான்.

LEAVE A REPLY