நடிகர்கள்:

விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு

ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி)

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பு: பிடி செல்வகுமார், ஷிபு தமீன்ஸ்

இயக்கம்: சிம்பு தேவன்

முன்பே இந்த படத்தை ஆளாளுக்கு கிளறி தட்டி , கோர்த்து தொங்க விட்டு விட்டார்கள் .என் பங்குக்கு நானும் …எம். ஜி. ஆர் , ரஜினி யை அடுத்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த மாஸ் ஹீரோ விஜய் .புலி படம் நிறைய பேர்கள்  மிக அதிக ஆவலோடு எதிர்பார்ப்போடு காத்திருந்த படம் . ஆனால் அந்த எதிர்பார்ப்பிற்கேற்ற தீனி படத்தில் மிக குறைவு .

திருட்டுத்தனமாக-வெளியான-புலி-படங்கள்..-பாய்கிறது-வழக்கு-1

முதலில் பாகுபலியோடு இந்த படத்தை ஒப்பிடுவது மிகத் தவறு .முதலில் அது ஒரு மொழி மாற்று படம் .தவிரவும் அதன் பட்ஜெட் , ஹீரோ …எல்லாம் வேறு . நமது ஹீரோவின் பக்கத்தில் கூட அந்த ஹீரோவால் வர முடியாது .( சும்மா எப்போ பார்த்தாலும் கல்லு மாதிரி மூஞ்சியை வச்சிக்கிட்டு …உடம்பை ஏத்தி என்ன செய்ய …? உணர்ச்சியை முகத்தில் காட்ட வேண்டாம் …?பாகுபலியை சொல்றேன் .)

நம்ம ஹீரோ புலியில் புலியாய் அசத்துறாரு .நடனம் , சண்டை , நடிப்பு என…தூள் .ஆனால் கதை …????ஏன் விஜய் இப்படி .நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கோளாறா …? இல்லை …அதனை திரைக்கதையாக பட்டை தீட்டியதில் கோளாறா …? ஏதோ ஒரு ஆரம்ப கோளாறு படம் முழுவதும் ஊர்வலமாய் கொடி பிடித்து வருகிறது .அதனால் இடைவேளையை எட்டுவதற்குள் திணறித்தான் போகிறோம் .


27-1443339258-puli999மிக அருமையான நடிகர் சுதீப். இந்த படத்தில் அவரது கதாபாத்திரமும் அருமை யானதுதான் .ஆனால் அதனை காட்சிப்படுத்தியவிதம் …ஏதோ குழப்பத்துடனேயே கையாளப்பட்டிருக்கும் இந்த பாத்திரம் இறுதி வரை எதுவும் செய்யாமலேயே நமது மனதோடு ஒட்டாமலேயே வெடித்து போகிறது ,படத்தில்

இறுதியில் அவர் மாயமோதிரத்தை அழித்து விட்டு தானும் வெடிப்பது போன்றே …

பிரபு இமயத்தின் ஒரு பகுதி நடிப்பில் .பண்பட்டவர் . பளிச்சென்று காட்டும் முக உணர்ச்சிகளில் தந்தையை கொண்டிருப்பவர் .அவரை ஹீரோவுக்கு அப்பாவாக்கி ,நடிப்பை குறைவாக்கி , காட்சிகளை சரிவாக்கி இறுதியில் இல்லையில்லை ஆரம்பத்திலேயே அநியாயமாக சாகடித்து விடுகிறார்கள் .

Kollywood-news-14027

இந்த படத்தின் இன்னொரு அழகான வீணடிப்பு நமது மயில் …ஸ்ரீதேவி .என்ன கண்ணுங்க அவுங்களுக்கு …அவுங்க நடிக்க வேண்டாம் …சும்மா வந்து நின்று அப்படி கண்ணை சுழட்டினாலே போதுமே …ரசிகர்களெல்லாம் தலை சுற்றி போவாங்க .அப்படிப்பட்ட அவுங்க கண்களுக்கு கோரமாக மை பூசி , அதீத பூச்சுக்களில் முகத்தை ஊறவிட்டு ( வில்லியாம் …) கொடூரமாக்கி …நடிப்பை காணாமலடித்து அப்பப்பா …நியாயமா …சிம்புதேவன் சார் ..????

இந்த ஸ்ருதி பொண்ணு ஒரு வேளை நம்ம உலகநாயகனோட பொண்ணா இல்லாமலிருந்திருந்தால் ரசிக்க முடிந்திருக்குமோ என்னவோ …?கமலின் மகள் என்ற எண்ணம் அவரது குறைகளை பூதக்கண ணாடியாக்குகிறது .எல்லையற்ற அவரது கவர்ச்சியும் , அந்த கொடூர தமிழும் , குரலும் …அப்பப்பா …நல்லவேளை இந்த பொண்ணு பாட்டுக்கு மட்டுந்தான் வருது என நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறது .

ஹன்சிகா …எப்போதும் போல் கொலு பொம்மை .இத்தனை படம் தாண்டியாச்சு …இந்த பொண்ணு எப்போதான் நடிக்குமோ …?சரி விடுங்க வருசம் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறதாம் .பெரிய மனசு .வாழ்த்துவோம் .


pulidரோபோ சங்கர், தம்பி ராமையா …எனஇந்த படத்தில் வீண்டிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது .சித்திரக்குள்ளர்கள் , ஒற்றைக்கண்ணன் , பச்சை தவளை , நகரும் பாலம் ,பேசும் பறவை , கருஞ்சிறுத்தை என நிறைய ரசிக்கக்கூடிய அம்புலி மாமா விசயங்கள் இருந்தும் ( பின்னே அந்த ஹாரிபாட்டர்லெல்லாம் என்னத்தை காட்டுறான் .அதையெல்லாம் ரசிக்கலை …? தமிழன் வித்தியாசமாக செய்தால் மட்டும் எல்லோருக்கும் நக்கல் ) அவற்றை காட்சிப்படுத்திய கோளாறுகளினால் சிறுபிள்ளைகளும் சலனமின்றி கன்னம் தாங்கி அமர்ந்திருந்தனர் அந்த காட்சிகளில் .

இசையென்ற பெயரில் தேவி ஸ்ரீ பிரசாத் அடித்திருக்கும் கூத்து .ஐயோ தாங்க முடியவில்லை .என்ன காரணத்தினால் இவரை செலக்ட் செய்தீர்கள் சிம்புதேவன் , விஜய் ..????? கொடுமைடா சாமி .

. படம் முழுக்க ஆட்டம் பாட்டு அதிரடி சண்டைகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் செட்டுகள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்தாலும், அவற்றை சுவாரஸ்யமாகத் தருவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் சிம்பு தேவன். பெருமளவு காட்சிகள் டல்லடித்தபடி நகர்கின்றன. 

மொத்தத்தில் புலி விஜய் ரசிகர்களுக்கு மட்டும் .இல்லையில்லை விஜயின் குழந்தை ரசிகர்களுக்கு மட்டும்…..

இது விஜய்க்கு ….

விடுங்கண்ணா …அடுத்த படத்தில் பட்டையை கிளப்பிடலாம் ….

  விமர்சித்தவர் பத்மா கிரகதுரை

 

Leave a comment

LEAVE A REPLY