இந்த மூன்றாம் பதிவில், கொஞ்சம்ஒரு மாறுதலுக்காக, துள்ளல் இசைகொண்ட பாடல்கள் இரண்டைபார்ப்போம். இரண்டிலும் பெண்ணையும், காதலையும், எத்துனை அழகாக வர்ணித்திருக்கிறார்கள், வர்ணனைக்கு ஏற்றார்ப்போல் அமைந்து இருக்கும் இசை , அதன் மகிமை பற்றி சொல்ல எனக்கு வயதில்லை. என் எண்ணங்களை மட்டும் இங்கு பகிர்கிறேன் . . 

 

1964 இல் வெளி வந்த “என் கடமை” படத்திலிருந்து ஒரு பாடல். அதில் என்னை கவர்ந்த சில வரிகள். (மன்னிக்கவும் நான் பெண்ணியம்பேசும் வீர மங்கை அல்ல. ஆனால் இந்த வரிகளில் கவிஞரின் பக்குவ பட்ட மனம் தெரிந்தது. இக்காலத்தில் மேலைநாட்டு மோகம் என்ற பேரிலும் கலாச்சாரம் சமத்துவம் என்ற பேரிலும்வரும் சில பாடல் வரிகள்அபத்தமானவையாக இருக்கும்பொழுது, அந்த காலத்தில், எவ்வளவு அழகாய் தெய்வீகமாக இவர்ணித்திருக்கிறார் (கண்ணதாசர்). இந்த காலத்தில் பெண்ணை ஒருபோதை வஸ்துவை போல் வெகுகீழ்த்தரமாய் வர்ணிக்கும் சில கவிஞர்களுக்கு இந்த வரிகள் மிகவும்அவசியமானவை.

 

கள்ளூறும் மலரென்ன பெண் ஆனதோ?

கருநாவல் பழம் என்ன கண்ணானதோ?

தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ?

 

இந்த பாடல் முழுதும் வழக்கமான இந்திய இசை இல்லாது , மேலைநாட்டின் இசை சாயல் என்றுசொன்னால் அது எனக்கு பாவம் சேர்ப்பிக்கும் . மேலை நாட்டின் இசையை இன்னும் சற்று மெருகேற்றி வித்தியாசமாய் நமக்கு அளித்திருக்கிறார் மன்னர். ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு துள்ளலோடு இருக்கும் பாடல் இது. இந்த களத்தின் ராப் பாப் ஜாஸ் எல்லாத்தையும் தூக்கிசாப்பிட்டு விடும் அந்த காலத்தின் மன்னனின் இசை.

 

அடுத்த ஒரு துள்ளல் இசை கொண்ட பாடல்… நிலவை அழகூட்டும் அருமையான வரிகள். பெரிய இடத்து பெண் (1963) படத்தில் வரும் இந்த பாடல் , என் கண்ணோட்டத்தில் … மன்னர்களின் அபரீத திறமைகள் இதில் தெரியும். அந்த , லலல்லா ஆஆஆ … அதெல்லாம் எங்கு இந்தகாலத்தில் “குத்து பாட்டு” என்று கத்தும்/ முனகும் / விகாரமான வரிகளைவெளிபடுத்தும் சிலருக்கு தெரியும் ?அந்த குரலில் இனிமையும் , ஸ்ருதிசுத்தமும், அக்ஷர சுத்தமாய் ஒளிக்கும் தமிழ் வார்த்தைகளும் . . .

 

நாடுதோறும் வந்த நிலா

நாகரீகம் பார்த்த நிலா

பார்த்து பார்த்து சலித்ததிலா

பாதி தேய்ந்தது வெள்ளி நிலா . . 

இப்படியாக , காதலையும் நாகரீகமாய் வெளிபடுத்தலாம் என்பது இவர்களின் பாடலில் தான் கண்டுகொள்ள முடியும். தொடர்ந்து 

எழுதுவேன் . . .

                                                                                                கானப்பிரியா மோகன் .

 

Leave a comment

LEAVE A REPLY