This article is done by Sathya Gp

 

அது ஒரு ஞாயிறு மதியப் பொழுது. ‘அமுல்’ தயாரிப்புகளுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதை தெரிந்து கொண்டு அந்த பெரிய சுய சேவைப் பிரிவு கொண்ட பல் பொருள் அங்காடிக்கு சென்றிருந்தேன். சமையல் வெண்ணை, சீஸ் வாங்கவேண்டுமென எண்ணம். அப்படியே ஏதேனும் காய்கறிகள் விலை குறைவாய் இருந்தால் வாங்கிவிட வேண்டும் என்னும் நப்பாசையும். அது தவிர்த்து பெரிய தீப்பெட்டி (home lite) வாங்க வேண்டும் என அம்மாவின் உத்தரவு. என் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பல தரப்பட்ட கடைகளில் அந்த பொருள் மட்டும் கிடைப்பதற்கரிய பொருளாய் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தது.

 

எதிர்பார்த்தது போல் கூட்டம் இல்லை. வெண்ணை, சீஸ் போன்ற பொருட்கள் குளிரூட்டப்பட்ட தனி அரங்கில் இருப்பதால் பார்த்து எளிதாக பெட்டியில் வைத்தாகிவிட்டது. அடுத்து காய்கறிகள் இருக்கும் பகுதிக்கு சென்று அலசி ஆராய்ந்து தேவையான அதே சமயம் விலை மலிவான காய்கறிகளையும் (பச்சை குட மிளகாய் 1 கிலோ – ரூபாய் 12/-, சௌ சௌ 1 கிலோ – ரூபாய் 8/-, ஊட்டி உருளைக் கிழங்கு 1 கிலோ – 19/-, வெள்ளை முள்ளங்கி 1 கிலோ – ரூபாய் 1௦/-) அள்ளி குவித்து விட்டேன். சில சமயம் நாம் எடுக்கும் முடிவு நமக்கே சாதகமாகத்தான் இருக்கிறது.  

 

நான் மௌனமாய் யோசிக்க, அவர் மீண்டும் “அட, இதுல என்ன பாஸ் இருக்கு’ என சொல்ல, நானும் சகஜமாகி பெரிய தீப்பெட்டி பற்றி கேட்க, அவர் தீப்பெட்டி இருக்கும் சரியான இடத்தை சொன்னார். நான் சரித்தபடி நன்றிங்க என சொல்லி தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்துக்கு நகர்ந்தேன்.

 

பொதுவாய், ஏன் என்னைப் பார்த்தே யாராவது கடையில் வேலை செய்பவர் என நினைத்து ஏதேனும் கேட்டால் கோபப் படாவிட்டாலும் முகம் சுளித்து என்னுடைய உடல் மொழி மூலம் உதவி கேட்ட மனிதரை சங்கடப்படவைத்திருக்கிறேன். நானும் பல தருணங்களில் மற்றவர்களால் சங்கடப்பட்டும் இருக்கிறேன் ஆனால் இந்த மனிதர் தன்னுடைய நடவடிக்கை மூலம் எங்கோ சென்று விட்டார்.

 

சின்ன விஷயம் தான் ஆனால் இங்கிதம், தன்மையாய் பழகும் விதம், சக மனிதரிடம் நட்பு பாராட்டுவது, இயல்பாய் இருத்தல், போலி கௌரவம் தவிர்த்தல் என சில நொடிகளில் எளிமையாய் பாடம் நடத்திவிட்டார் (குறிப்பாய் அவருக்கே தெரியாமல்)

 

பின் குறிப்பு : நான் பில்லுக்கு காசு செலுத்தும் போது அவரும் அங்கே வர நான் அவரை பார்த்து சிரிக்க அவரும் சிரிக்க அவருக்காக நான் காத்திருக்க, இருவரும் வெளியே வந்தோம். அடுத்து அருகில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு சென்று தேநீரும் குடித்தபடி பரஸ்பர சுய அறிமுகம், நலம், முகவரி விசாரிப்புகள் என பேசி இனிமையானது அர்த்தமானது அந்த மதியப் பொழுது.

 

ஸ்நேகம் என்பது இயல்பாய் மனிதர்களுக்குள் பூக்கும் பூ. அது கடவுள் கொடுத்த வரம் போலும்.  

                                                                                                       – சத்யா GP                    

 

 

Leave a comment

LEAVE A REPLY