This article is written by Ananthan Amirthan .HE shared  about Bharathiyar the genious  tamil poet with us .Bharathi was an wonderful man /.Here some of his interesting love  experience in his poem with us

 

பளார்ர்…பளார்ர்ர்…
ஒரு அண்ணன் என்னை அறைந்த சத்தம் தான்.

“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”
இதுக்கு என்ன அர்த்தம் தம்பி?

தீயினைத் தொடும் போது கூட கண்ணனைத் தீண்டிய இன்பம் கிடைக்குதாமாம் பாரதிக்கு…

மெல்லப் புன்னகைத்து,
பாரதி எதார்த்தக் கவிஞன் தீக்குள் விரலை வைத்தால் சுடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவன் இல்லை. மேலும் தீயை என்று சொல்லாமல் “தீக்குள்” என்று சொல்லியிருக்கிறான். அவன் சொன்ன தீ என்பது “சூரியன்”.

சூரியனுக்கு உட்புறம் மிகுந்த குளிர்ச்சியானதாக இருக்கும்னு இன்றைய விஞ்ஞானிகள் சொல்றாங்க. வேதங்களையும், உபநிடதங்களை உள்வாங்கிய பாரதியின் பிரபஞ்சப் பார்வை இது என்று சொல்லி விட்டு,

“பாரதியை உள்வாங்கிப் படி இல்லாவிட்டால் அது வெறும் உற்சாகம் கொடுக்கும் பட்டிமன்றப் பாட்டாகவே உணர்வாய்” என்று பளார்ர்ர் பளார்ர்….

———————————————————————————————

செக்யூலர் பாரதி!

எல்லா கடவுளும் ஒன்னு தாம்லே! அது புரிஞ்சுச்சுனா ஒரு பிரச்சினையும் இல்லவே! மூலக் கடவுளின் அருளை பெற்று நீடூழி வாழ்வோம்லே!

“ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைகிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதன்நிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.”

——————————————————————————————-

”பாரதி ஒரு தீவிரவாதியாக இருந்திருந்தால் குடிராம் போஸ், உத்தம் சிங், வாஞ்சிநாதன், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்று யாரையாவது சிலரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அதற்காக தூக்கில் தொங்க விடப்பட்டிருப்பார்.

அவர் ஒரு ஆரியவாதியாக இருந்திருந்தால் சம்ஸ்கிருதம் இந்தி பிரெஞ்சு ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்ற பின்னரும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடியிருக்கமாட்டார். சமஸ்கிருதமே உலகின் தாய்மொழி என்று பாடியிருப்பார்.

தத்துவவாதியாக இருந்திருந்தால் ஆதி சங்கரர் போல பத்து பதினைந்து உபநிஷதங்களுக்கு உரை எழுதிவிட்டு ஒரு மடத்தை ஆரம்பித்திருப்பார்.

இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் புறனானூறு அகநானூறு பாணியில் நிறைய எழுதிக்குவித்து பாமர மக்களுக்குப் பயன் படாத இலக்கிய பொக்கிஷங்களை அளித்துவிட்டு அவைகள் எல்லாவற்றையும் கன்னிமரா லைப்ரரிக்கும் கல்கத்தா தேசிய நூலகத்துக்கும் மட்டும் அனுப்பி திருப்தி அடைந்திருப்பார்.

அவர் விட்டமூச்செல்லாம் தமிழ் மூச்சு, கண்ட கனவெல்லாம் சுதந்திரம் பற்றிய கனவு, பாடிய பாடல் எல்லாம் பெண்விடுதலை (பாஞ்சாலி சபதம் மற்றும் பெண் விடுதலைப் பாடல்கள்) தேசிய பாடல்கள். அவர் விடுத்த சூளுரை எல்லாம் கிருத யுகத்தை மீண்டும் எழுப்புவேன் என்பதே.

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை அளித்த அவன் ஒரு தேசிய– சீர்திருத்த– தமிழ் கவிஞன்– என்பதே உண்மை.(சீர்திருத்தம் என்பதில் பெண் விடுதலை முதலியன அடங்கிவிடும்).

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றன் சொன்னதில் மனித இனம் மட்டுமே அடங்கும். ஆனால் பாரதியோவெனில் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடி தமிழினத்துக்கு மேலும் பெருமை சேர்த்தான். ”

உள்ளம் உருகி… ஊனை உருக்கி, நான் நானல்ல… இந்த உலக ஜீவராசிகளுக்குள் கரைந்திருக்கிறேன். நாயினும் கீழோன். நுண்ணுயிரினும் இளையோன் என்பதாகத் தான் பலரின் அத்வைத விளக்கம், புரிதல் இருக்கும் (என் சிற்றறிவுக்கு எட்டியவரை). ஆனால்,

பெண்கள் இசைக்கும் இனிமையும் நான் தான்…
இன்பத் திரள்களெல்லாம் நான் தான்…
இந்த அண்டங்கள் எல்லாமே நான் தான்…
அவற்றை பிழையில்லாமல் சுழற்றச் செய்வதும் நான் தான்…

என்று உயர்வானவை எல்லாம் நான் தான் என்று சொல்லியதுடன் நிற்காமல்,

“மோசமான மனிதர்களின் பொய்களும் நான் தான்…
பொறுக்க முடியாத துன்பங்களும் நான் தான்”.

என்றும் செருக்கோடு சொல்கிறான்.
முத்தாய்ப்பாக,

“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!”

என்று முழுமுதற் பொருளாய் நிறைந்து வியாபிக்கும் பாங்கும், இத்தனை கம்பீரமாக அத்வைதத்தை ஊட்டுவதும் இந்த ஞானச் செருக்கனைத் தவிர வேறு யார் உளர்?

பாரதீ…!

   ஆனந்தன் அமிர்தன்

 

Leave a comment

LEAVE A REPLY