இப்படத்தில் நாயகன், நாயகியை காதலிக்கிறான். அவளும், அவனைக் காதலிக்கிறாள். ஆனால் அவளுடைய காதலை அவனுக்கு தெரியப்படுத்தமாட்டாள். இது தெரியாத நாயகன் “தாம் அவளை ஒரு தலையாக காதலிக்கிறோம்” என்று  நினைத்து இப்பாடலை பாடுகிறான்.

 கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்,
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்,
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்,
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்…..
 முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி,
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி,
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி,
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…..
  கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்,
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்…..
 கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி,
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி,
கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி,
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்……
 கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்,
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..
முகாறி ராகம், முகாறி ராகம்……..
 
                                                                                   ஜெயா வீரப்பன்

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY