படம் – உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் – வைரமுத்து
இசை – இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி

 

கொஞ்சநாட்கள் கழித்து இன்று இந்த பாடல் .எப்போதும் போல் உயிரினுள் கரைகிறது .துடைக்க கைகள் இருந்தால் அழுவதற்கு அஞ்சுவதில்லை கண்கள் ….அருமையான பாடல் …

சிறகெல்லாம் சிதையாக ….என்ன வார்த்தை பிரயோகம் !!!!!. .வைரமுத்து சார் ….சூப்பர் .

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம் .

   பத்மா கிரகதுரை

Leave a comment

LEAVE A REPLY