எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு வேப்பமரம் ..அதன் உச்சிக் கிளைமீது காக்கையின் கூடு ..நேற்றைய இரவில் புயலுடன் கூடிய மழை .. நினைவில் வந்து கவலை தந்தது காக்கையின் கூடு ..விடிந்ததும் ஓடிப் பொய் பார்த்தேன் ..சிதிலமடையாமல் பாதுகாப்பாக இருந்தது ..திரும்பிய போதுதான் அதை உணர்ந்தேன் ..இந்த பிரபஞ்சத்தின் முன்னோடி கட்டிடக் கலை வல்லுனர்கள் பறவைகளே என்பதை ..
இன்று ecr ரோடில் உள்ள ‘திருவிடந்தை ‘ ஊரில் உள்ள ‘நித்திய கல்யாண பெருமாள் ‘கோவிலுக்கு போயிறோந்தோம் ..மகாபலிபுரத்துக்கு அருகில் உள்ள கோவில் இது ..நிறைய கூட்டம் ..திவ்ய தரிசனம் ..சில்லென்ற கோவிலின் சுற்றுப்பிரகாரம் ..சிருங்காரப் பார்வையோடு பூமாதேவியை ஏந்தியிருக்கும் வராஹப்பெருமாள் ..கொமளவள்ளிதாயார் ..ஆண்டாள் தாயார் ..கோவிலை விட்டு வெளியே வந்த பொது கையில் வெள்ளிப்பூண் போட்ட பிரம்போடு குறி சொல்ல வந்த ‘ஜக்கம்மா’ கை நீட்டினேன் ..சொல்லப் பட்ட ஆருடத்தை விட கேட்டதும் நான் கை நீட்டியதில் அந்த மூதாட்டியின் கண்களில் மின்னிய சந்தோசமே என்னைக் கவர்ந்தது
 
 

Leave a comment

LEAVE A REPLY