நமது முதல் விவாதத்தை இன்று தொடங்குவோம் தோழமைகளே .இதோ நமது விவாத்த்திற்கான  தலைப்பு .திருமணத்திற்கு பின் பிறந்தவீடு பெண்களுக்கு சொந்தமா ..?

கருத்துக்களை அள்ளி விடுங்க தோழமைகளே …

சுயஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ….

அது ஏனென்று அவளுக்கு புரியத்தான் இல்லை ..அவளின் தந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி இருந்ததும் அந்த வீட்டில்தான் ..அவள் பிறந்து தவழ்ந்து தளிர்நடை போட்டு வளர்ந்ததும் அந்த வீட்டில்தான் ..அவள் நட்டு வளர்த்த முல்லைக்கொடி இன்றளவும் அவள் வீட்டு தோட்டத்தில் பரவி படர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது ..அவள் மட்டும் திருமணம் என்ற பெயரில் அந்த வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள் என்றால் இது கொடுமையல்லவா …?திருமணமாகி போன பின்னால் பிறந்தவீடு பெண்களுக்கு சொந்தமில்லையா …?

 

Leave a comment

4 COMMENTS

  1. திருமணம் வரைக்கும் எதுக்கு. பரிசம் போடும் போதேதான் நம் அம்மாவிடம் குடித்த பாலுக்கு உண்டான பணத்தை தந்து விடுகிறார்களே! அப்புறம் எங்கிருந்து பிறந்த வீடு. ஹும்! இங்க வந்தா “எடுத்ததுக்கும் என் வீடு,” இந்த கொடுமையை எங்கு சொல்றது. நமக்கு சொந்த வீடு திருமணம் முடிந்து ஒரு முப்பது வருடம் கழித்து நாமளும் உழைத்து கட்டினால் கிடைக்கும்

  2. kandipa ila…pirantha veedu namaku kalyanam anathum sontham illai….Namoda husband veedu than sontham….ithan fact,,,
    But itha ponnungha manasala ethuka mudiathu…yena nam piranthu ,vazhanthu, santhosama vazhantha veedu….

LEAVE A REPLY