எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் இசை பிடிக்கும். எனக்கு பாடல்கள் கேட்பது வெகு சுகம். இப்பொழுதெல்லாம் நம் மக்கள் சிலர் பாட்டை பாடாய் படுத்தி பயண்பாட்டை உயர்த்தியும் இருக்கின்றனர். பாடல்களில் எழுந்து, பாடலுடன் குளித்து, பாடலுடன் வேலைக்கு சென்று, பாடலுடன் பாட்டும் வாங்கிகட்டிக்கொண்டு… இப்படி பாடலிற்கு ஏராள பயன் பாடுகள் உண்டு. பாடல்களால் வர்ணிக்க முடியாத விஷயமோ, இசையால் உணர முடியாத விஷயமோ ஏதும் இல்லை, என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. காதலித்தாலும் பாடல், கடலில் தோத்தாலும் பாடல், பூக்கள் பேசினாலும் பாடல், மரண விளிம்பிலும் பாடல், குழந்தை பிறந்தாலும் பாடல், பெண்ணை வளர்ந்தாலும் பாடல் ,ஆடலோடும் பாடல் ! இப்படியாக பாடல்கள் நிறைந்த இந்த உலகினில்,  என்னுள் தாக்கம் தந்த சில பாடல் வரிகள், அதன் இசை உணர்வுகளை , மற்றும் நான் ரசித்த விஷயங்களை இங்கே பதிவிடுகிறேன். இரவு பகலாய் வேலையோடும்  இசையோடும்  விளையாடும் என் போன்றோருக்கு இந்த தொடர் பதிவுகள், என்னிடம் இருந்து.

 

பதிவிற்கு முன்பு, என்னை பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா.. தனது இசையால் என்னை கவர்ந்த பல மேதைகள் இருந்த பொழுதும், என்றுமே, என் மன சாம்ரஜ்யதிற்கு, இன்றும் அன்றும் என்றும் – தெய்வ திரு M .S விஸ்வநாதன் தான். அவர் விட்டு சென்ற இசைக்கு என்றும் நான் அடிமை. இசையில் – தனது குரலில், தனது பாவத்தில், என்னுள் தாக்கம் ஏற்படுத்தியது – இன்றளவும் ஏற்படுத்தி கொண்டிருப்பது – திரு. ஸ்ரீநிவாஸ் . ஆதலிலால் , எனது பதிவுகள், கூடுமானவரை இவ்விரு மாமேதைகளை சுற்றி இருக்கும். 
“என் இசையுலகின் மன்னன் msv என்றால், அதன் இளவரசர், ஸ்ரீநிவாஸ் தான். ” இது என் தனிப்பட்ட கருத்து. எனது முந்தைய இரண்டு பதிவுகளை படித்த பலருக்கு தெரிந்திருக்கும். ஆம், கன்னதாசரின் வரிகளுக்கு MSV  உணர்வூட்டி, சுஷீலாம்மா குரலில் நமக்கு பரிசாய் வரும் பாடல்களுக்கும் , தமிழுக்கு முத்துபில்லையாய் இருக்கும் வைரமுத்துவின் வரிகளை எ ஆர் ரகுமானின் இசையோடு உணர்வூட்டி திகட்ட வைக்கும் ஸ்ரீனிவாசின் குரலுக்கும், இந்த பதிவுகள் சமர்ப்பணம். இவ்விரு கலைஞ – கலவைக்கு நான் எப்போழுத்தும் அடிமை.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார் 
மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் ! 
கண்ணதாசரின் வரிகளுக்கு உணர்வூட்டி இருக்கிறார் MSV . மன்னாதி மன்னன் (1960) படத்தில் வரும் பல பாடல்கள் வெகு அருமையாய் இருக்கும் . அதில் வரும் காட்சிகளும் ரசிக்கும் படியாய் இருக்கும். பாரதியார் – பகத் சிங்க் – நேதாஜி இவர்களின் பக்தியாய் இருக்கும் எனக்கு இந்த வரிகளும் அதற்கேத்தாற்போல் பின்னணியில் இசையும் வரும் பொழுது சிலிர்த்து விடும் அனுபவம் கிடைக்கும். தேசபற்றேனும் ஒரு உணர்வை தரும் எனக்கு – இந்த பாடல்…
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம் ,
மறுநாளை என்னதே இந்நாளே பொன்னாளாம் 
பல்லக்கை தூக்காதே, பல்லகில் நீ ஏறு,
உன் ஆயுள் 90 எந்நாளும் நீ பதினாறு. 
இப்படி பளிச்சென்று சாதரணமாய் அதே சமயம் அழுத்தமாய் வரிகள் தந்தது வாலியின் மை தாங்கும் வலிமை. நினைத்தாலே இனிக்கும் (1979) படத்தில் MSV இசை அமைப்பில் வந்த பாடலின் வரி தான் அது. சொர்வுடையும் நிலையில் இருக்கும் பொழுது இந்த வரிகளும் அதற்கான இசை கட்டமைப்பையும் கேட்கும் பொழுது சோர்வுடைந்து புது சக்திகள்பிறப்பிக்கும்.  
பற்றும் சக்தியும் பற்றியே பேசிய நமக்கு புதிதாய் இருந்தாலும் இன்னும் பாடல்கள் மூலம் வெளிபடுத்த படும் காதல், நட்பு, அழுகை இதை பற்றி,
தொடர்ந்து எழுதுவேன் . . . 
                                                                                             கானப்பிரியா மோகன் 

Leave a comment

LEAVE A REPLY