பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பிள்ளையாரை குறிக்கும் என் மனங்கவர்ந்த பாடல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

இந்த பாடல் வான்மதி  படத்தில் வருவது .இசை தேவா .பாடியவரும் அவரே .

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா
கணேசா நீ
கருணை வச்சா நானும் ஹீரோப்பா
ஆத்தோரம் ஆலமரம் அவுட்டோரில் அரசமரம்
ஆல்ரவுண்டர் நீதாம்பா கணேசா
என் கேர்ள் ப்ரெண்டை சேர்த்து வையி கணேசா
எப்பா எப்பா  தொப்பை கணேசா
எனக்கு அப்பா அம்மா
நீதான் கணேசா .

கணேசன் பிரம்மச்சாரிதான் .ஆனால் தன் தம்பியின் காதலுக்கு எப்படி உதவினார் என்பதனை நாம் அறிவோம் .அதனால்தானோ என்னவோ இந்த ஹீரோவும் தன் காதலியை சேர்த து வைக்கும்படி வேண டுகிறார் .

படுத்தா பாய் விரிச்சா தூக்கமில்லை கணேசா
படுற பாட்டை நீயும் அறிஞ்சிடுவ கணேசா
நாளும் தெரிஞ்சிருந்தும் நடிக்கிறீயே கணேசா
நடிப்பால் நீயும் ஒரு செவாலியே கணேசா …

தனது காதல் வேதனையை கூட ஒரு நண்பனிடம் போல் அந்த விநாயகரிடம் பகிர்ந்து கொள்கிறார் ஹீரோ .

மிக எளிமையான இந்த பாடல் என் மனதினை மிகவும் கவர்ந்த்து .

————————————————————————————–

இதே போல் என் கருத்தில் நின்ற மற்றொரு விநாயகர் பாடல்

படம்  ; அமர்களம்
பாடல்: காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
குரல்: ஸ்ரீநிவாஸ், குழுவினர்
வரிகள்: வைரமுத்து

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
மஹாகணபதி…மஹாகணபதி…மஹாகணபதி…மஹாகணபதி…

கண்ணகிக்குக் கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது
கற்புன்னா எத்தன லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு
மிடியோடு சுரிதாரும் பொது உடையாகிப்போச்சு
போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு ???? தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
மஹாகணபதி…மஹாகணபதி…மஹாகணபதி…மஹாகணபதி…

அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துள்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்ல தாயே செத்தாலும் அழுவதில்ல
அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
அட பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது
மஹாகணபதி…மஹாகணபதி…

மாறிவிட்ட காலத்தின் கோலத்தை இதை விட அழகாக யாரால் சொல்ல முடியும் .

 

                                                                                        ரசித்தவர் ; பத்மா கிரகதுரை

Leave a comment

LEAVE A REPLY