வீட்டினுள் நுழைந்ததும் வருவது இந்த அறை.நமது பெரும்பான்மை பொழுதுகள் கழிவதும் இங்கேதான்.நமக்கான நல அபிப்ராயத்தை தோற்றுவிப்பதும் இந்த அறையே.அதற்கான அலங்காரங்களை பார்போம்.

வீட்டில் நுழைந்தவுடன் உங்கள் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நுழைந்ததும் ஆடம்பர,விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் அவை உங்கள் வழியை அடைக்காமலும், தேவையான நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். அமருவதற்கெனவும் பேசுவதற்கெனவும் தனி அறைகள் உள்ள பட்சத்தில் சோஃபா அங்கிருத்தல் நலம். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.

வீட்டின் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம். அது உற்சாகத்தை தரும். ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம்.

சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம். டீபாய் மேல் சின்னதாய் ஒரு பூ ஜாடி வைத்து நம் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களை அன்றாடம் பறித்து அலங்கரிப்பது வீட்டினை உயிரோட்டமுள்ளதாக மாற்றும்.

அழகான பெயிண்டிங்

எம்ராய்டரி செய்த கர்ச்சிப் துணிகளை ப்ரேம் போட்டு சுவர் அலங்காரமாய் மாட்டலாம். அழகான பெயிண்டிங் உள்ள காலண்டர்களை தூக்கிப் போடாமல் ப்ரேம் போட்டு டைனிங் ரூம், ஹாலில் மாட்டலாம். செலவு அதிகம் ஏற்படாது. தரை அழுக்காகமல் இருக்க வினைல் சீட்களை ஒட்டலாம். குறைவான விலையில் நிறைவான அழகை பெறலாம்.

                                                                                        அலங்கரிப்பு தொடரும்

 

Leave a comment

LEAVE A REPLY