வரலாற்று மற்றும் இலக்கியச்சிறப்பும், தொண்மையும், கோவில்களிலே தலயாய கோவில் என்ற புகழையும் பெற்றது, பேரூர் பட்டீசுவரர் கோவில். மூவேந்தர்களுடன் தொடர்புடைய இக்கோவில் கட்டி ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இரண்டாயிரமாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 சோழர்காலத்தில் கட்டப்பட்ட கட்டடக்கலைக்கு பேரூரே முதல் உதாரணமாக விளங்குகிறது. கரிகாற்சோழன், விக்கிரமசோழன், வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச்சோழர்களின் கல்வெட்டுகள் இன்னமும் காட்சியளிக்கின்றன. சிற்பவளத்திலும், இலக்கிய வளத்திலும் பெருமை பொருந்திய பேரூர் உலக அளவில் பெருமையை பெற்றுள்ளது. பேரூர் கல்வெட்டுகள் மற்றும் கோவிலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் கற்பனை, இலக்கியச்சுவை, பொருட்சுவை, தத்துவக்கருத்து, வழிபாடு ஆகியவை பரவிக்கிடக்கின்றன.

திருச்ட்ரம்அலம்

கோவிலின் மேற்பரப்பில் வரைப்பட்டுள்ள ஓவியங்கள் அனைத்தும் சைவசமயத்தை தழைக்கச்செய்த 64 நாயன்மார்களை பற்றிய பாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரை பற்றிய வரலாற்றை சுருக்கமாகவும், பேரூர் பற்றிய செய்தியை விரிவாகவும் அதற்கேற்ற படத்தை ஓவியமாக வரைந்துள்ளனர். பேரூர் புராணத்தை கச்சியப்ப முனிவர் செய்யுளாகவே எழுதியிருந்தார். இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் உரைநடையாக எழுதி பேரூருக்கு மேலும் பெருமையை சேர்த்தவர் கோவைகிழார்.

கோவிலில் உள்ள புகழ்பெற்ற கனகசபை மண்டபத்தில் கோமுனி, பட்டிமுனி ஆகிய இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜரின் வடிவம் மிகவும் அழகானது. இது பார்ப்போரை ரசிக்க செய்வதோடு மெய்மறக்கச்செய்கிறது. சைவ சமயச்சார்புள்ள இறைவடிவங்களின் எழில்மிகு வேலைப்பாடுகள், மனிதனின் சிந்தையை கவர்கிறது. கோபுர விமானம் அங்கு வடிக்கப்பட்டுள்ள தாமரை மலர், கல்லாலான சங்கிலி, சிறிய தூண்களில் காட்டப்பட்டுள்ள புராணக்கதைகளில் அன்றைய சிற்பிகள், கலையில் புகுந்து விளையாடியுள்ளனர்.

புராதனமான கோவிலின் கற்பக்கிரஹத்தை கரிகாற்சோழன் அமைத்துள்ளார். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பேரூரை புகழ்ந்து பாடியுள்ளார்.  ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் பேரூருக்கு வருகை புரிந்து இறைவனை வழிபாடு செய்து தேவாரம் பாடியுள்ளார்.

201504031140275785_Shadow-of-the-Tower-House-touched_SECVPF

12 முதல் 13ம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபத்தையும், மகாமண்டபத்தையும் கட்டினர்.  பேரூர் கோவிலில் மொத்தம் 6 கோபுரங்கள் உள்ளன. வரலாற்று கால கணக்குப்படி பேரூர் ரோமானியர் காலத்திலேயே அந்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அக்காலத்திய நாணயங்களின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  கோவிலின் முகப்பில் உள்ள தெப்பக்குளம்  பதினாறு வளைவுகளை கொண்ட நான்கடுக்குகளை கொண்டுள்ளது. சிறியதும், பெரியதுமான தேர்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிமாநதி என்றழைக்கப்படும்.நொய்யல் நதி அதன் இரு பக்கங்களிலும் காட்சியளிக்கும் தென்னந் தோப்புகள், சோழன் துறை என்றழைக்கப்படும் நொய்யல் படித்துறை ஆகியவை இன்றளவும் உள்ளன. பேரூரை வடக்குப்பகுதியிலும், தெற்கு பகுதியிலும் அரனாக நின்று பாதுகாப்பது வடகைலாய நாதர் கோவில், பட்டீசுவரர் கோவிலை தென்கைலாய நாதர் கோவில் என்றழைக்கின்றனர்.

தமிழகத்தில் கொங்கில் அளிக்காஞ்சிவாய்ப் பேரூர் எனச் சிறப்பித்துக் கூறும் மேலைச் சிதம்பரமாகிய இத்தலம், தொன்மைச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும், இலக்கியச் சிறப்பும், கோயிற் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றது.  பழங்கற்சின்னமும், முதுமக்கள் தாழியும், உரோமானியக் காசும் இப்பகுதியில் மிகுதியாய்க் கிடைப்பது தொன்மைக்குச் சான்றாகும்.

திருக்கோயிலழகும் சிற்பச் சிறப்பும் உடையது என்கிற நற்பெயரைப் பொதுவாகத் தட்டிக்கொண்டு போவது தஞ்சை மாவட்டம் தான்.  இந்தப் பெருமைக்குப் போட்டி போடும் விகதமாக அமைந்திருப்பது கோவை மாவட்டத்திலுள்ள திருப்பேரூர் ஆகும்.

‘ஆரூரார் பேரூரர் என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும் என்றும் அப்பர் சுவாமிகள் சுவாமிகள் தனது சேஷத்திரக்  கோவையில்; இரண்டிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே சுமார் கி.பி. 650-க்கு முன்னரே பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.  பேரூர் பற்றிய தனித் தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரம்

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.  கிழக்கு பார்த்த வாசல்.  ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன

‘சோழன் பூர்வ பட்டயம்’ என்ற செப்பேடு பேரூர்க் கோயிலை கரிகாலன் கட்டியதாகக் கூறுகிறது. பேரூரில் உள்ள காஞ்சி யாற்றுத் துறைக்குக் கரிகாற் சோழன் துறை என்று பெயர்.  கரிகாற் சோழன், விக்கிரம சோழன், வீர ராசேந்திரன், கோனேரின்மை கொண்டான் முதலிய கொங்குச் சோழர் கல்வெட்டுக்கள் இங்கு மிகுதியாக உள்ளன.  இதனால் சோழர் தொடர்பு புலனாகிறது.

ஆதாரங்கள்

கோவிலுக்கு வடக்கே காஞ்சி நதியில் கட்டப்பட்டுள்ள சோழன் படித்துறை கரிகாற் சோழனால் அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

கொங்குநாட்டின் வரலாற்றையே இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

கொங்கு சோழர் கட்டிய அர்த்தமண்டபம், மைசூர் அரசர் வெட்டிய 16 கோணமுள்ள   திருக்குளம், ஹோசைலர்களின் திருப்பணி இவை தவிர பல செப்புப் பட்டயங்களும் உள்ளன

                                                                                      தகவல்     பத்மா கிரகதுரை

Leave a comment

LEAVE A REPLY