இசை என்பது அனைவரின் நெஞ்சையும் கொள்ளை அடிக்கும்; மனதோடு தங்கும் துக்கத்தையும் தன மடிதனில் தாங்கும் ! இசையினால் உருகாத உள்ளங்களேதும் உண்டா என்றால், நிச்சியம் இல்லை. இசையின் பரிமாணம் வெவ்வேறு என்றாலும் எல்லாம் இசையல்லவோ ?

எனக்கும் இசை என்றால் வெகு பிரியம். இது தெரிந்து தான் என் பெற்றோரும் பாட்டி தாத்தாவும் எனக்கு கானபிரியா என்று நாமகரனமிட்டனறோ , எனக்கு தெரியாது !
என்னை தனது இசைக்கு அடிமையாகிய இசை சக்ரவர்த்தி மாமன்னன் மேதகு. எம் எஸ் விசுவநாதன் அய்யா தான். அவரின் பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கம்.. ஏராளம் வார்த்தைகளில் வடிக்கமுடியாத அளவுக்கு ஏராளம். . . . 
கவியரசர் எழுத்துகள் மூலம் தமிழுக்கு உயிர் தந்தாரே  எனில், இசை மன்னர் அவர் தந்த உயிருக்கு உணர்வூடினார் . இன்றளவும் என் நெஞ்ஜில் நீங்காது இடம் பிடித்த பாடல்கலும் அதிலிருந்து ஒரிரு வரிகளும் . . . .
“காதலித்தல் பாவம் என்றால் கண்களே பாவம் அன்றோ ,
கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ,
பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ . . “
வாழ்கை படகு எனும் படத்தில் ஜமுனா ராணி குரலில் கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன் ராமமுர்த்தி இசையில். 1965 இல் – அத்துணை இசை கருவிகள் இல்லை. இன்று போல் தொழில் நுட்பமும் இல்லை.. இருப்பினும், அந்த தேன் சொட்டும் குரலில் கமக்கம் தர வைத்து, அதில் ஒரு பாவம் புகட்டி, காதலையும் பெண்மையையும் தாய்மையையும் ஒருங்கிணைத்த இந்த வரிகளும் அதன் இசையும் . . .இன்றும் நீர் நிற்கும் கண்களில்…
“திருமால் பிரம்மன் சிவனெனும் மூவர் காவலில் நின்றிருந்தாலோ தேவி வைதேஹி காத்திருந்தாளோ . . .”
அண்ணன்களின் காவலில் தங்கை நிற்பதையும் ஸ்ரீ ராமனினால் மாலையிடபட்டதையும் அழகை வார்த்தைகளில் கூற, அதற்கேத்தாற்போல் அனாசியமாய் சங்கதிகள் கொண்டு தன் தேன் குரலில் பாடவைத்தார் மன்னர் , சுசீலம்மாவை. அதிலும், ஸ்ரீராமன் மலைஇடும் தருணம் வரும் இசை – மங்களகரமாகவும், ரசிக்கும் படியாகவும் இருக்கும்.. 
சீர்வரிசை என்று ஒரு படத்தில் வரும் பாடல்.. 
கண்ணனை நினைக்காத நாள் இல்லை 
உண்ணும் போதும்
உறங்கும் போதும் 
எண்ணம் முழுதும் கண்ணன் தானே…
அழகாய் வந்து விழும் சில சங்கதிகளும் அங்கங்கே சில கமக்கங்களும் . .  கர்நாடக உணர்வோடு மேலை நாட்டின் இசையும் சேர்த்து , சரணங்களில் முடிவில், பஜனை போலும் வடிவமைக்க பட்டிருக்கும் பாடல் . . .
யார் சொன்னது பழமை சோடை போகும் என்று . . பழமையிலும் புது புது சங்கீத கலைகளை அலுங்காது அலுக்காது நமக்கு தந்த இசை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி msv அய்யா அவர்களை என் வாழ் நாளில் ஒரேஒரு முறையாவது பார்த்திருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது பெருமையாய் தான் உள்ளது . . . உனக்கு நீயே நிகரானவன், மன்னவா . .  ! 
                                                                            இசையை ரசித்தவர்      கானப்ரியா

 

Leave a comment

LEAVE A REPLY