மெல்லிய  சோகத்தோடு  காதலையும்  கலந்து  சொல்லும்  இந்த  பாடல்  என் மனதினை  மிகவும்  கவர்ந்தது .இந்த பாடலில்  இருக்கும் மென்சோகம் நம்மை அறியாது நம்மை உள் இழுத்து கொள்ளும்.இது போல் ஒரு மிக சிறந்த பாடலை எஸ் .பி.பி இதற்கு முன்பும் பாடியதில்லை, இனி மேலும் பாடபோவதிலை என்றே எண்ணுகிறேன்.

படம் : சிகரம் 
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
இயற்றியவர் : வைரமுத்து 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை


பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

                                                             

                                                                             ரசித்தவர்   முத்துலட்சுமி ராகவன்

 

                     

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY