கணவனும் மனைவியும்

கடைத்தெருவில் நடக்கும் பொழுது மனைவி சற்று தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்….

Banaras saree Rs10/- Nylon saree Rs 8/- Cotton saree Rs 5/-

மனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்… நான் 50 புடவை வாங்கனும்

கணவன்: அது இஸ்திரி போடும் கடைடி எரும மாடு

 

 புலி_திரைக்கதை

அது ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை ஸ்ரீ தேவி ஆட்சி புரிகிறார். ஒரு நாள் தன் மகள் ஹன்சிகாவிற்கு வைரம் வாங்க வேண்டுமென்று தன்னுடைய படைத்தளபதி சுதீபிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நகரத்து பொற்கொல்லனான பிரபுவிடம் குறைந்த விலையில் வைரம் வாங்கி வருமாறு ஆணையிடுகிறார். சுதீப் பிரபுவிடம் பணத்தை கொடுத்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் வைரம் வேண்டும் என்கிறார். ஆனால் பிரபுவோ தான் அவசரமாக குரோம்பேட் #கல்யாண் ஜுவெல்லர்ஸ் நகை கடையை திறந்து வைக்க செல்ல இருப்பதாகவும், பாண்டி பஜாரில் இருக்கும் கல்யாண் ஜுவெல்லர்ஸ் நகை கடையில் வைரம் வாங்கி வருமாறு தன் மகனான விஜய்க்கு கட்டளை யிடுகிறார். விஜயோ சிறுபிள்ளைத்தனமாக அந்த பணத்தை சுருதி ஹாசனுடன் டூயட் பாடியே செலவு செய்து விடுகிறார். குறித்த நேரத்தில் வைரம் வராததால் ஆத்திரம் அடைந்த சுதீப் விஜயை கட்டி இழுத்து அரசியின் கோட்டைக்கு கொண்டு வருகிறார். விஜய் பணத்தை செலவு செய்ததை அறிந்த ஸ்ரீ தேவி அவரை கருஞ்சி சிறுத்தைக்கு உணவக்கிவிட ஆணையிடுகிறார். ஆனால் விஜயின் அலறலைக்கண்ட சிறுத்தை இறந்து போகிறது. இதைக்கண்ட ஸ்ரீதேவி தன் மகளான ஹன்சிகாவை சிறுத்தையை அலறியே கொன்ற விஜய்க்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அரியணையை கைப்பற்ற ஹன்சிகாவை மணமுடிக்க துடிக்கும் சுதீப், விஜய்க்கு மேலும் பல போட்டிகளை வைத்து பலப்பரீட்சை வைக்கிறார். இப்போட்டிகளில் எல்லாம் வென்று ஹன்சிகாவை விஜய் கை பிடிக்கிறாரா? பிரபு குரோம்பேட்டையில் நகை கடையை திறக்கிறாரா?. சுருதிஹாசன் என்ன ஆனார் என்பதே மீதி கதை. முழு கதையையும் வெளியிட்டால் பாகுபலியின் பத்து மடங்கு வசுலான 5000 கோடி வசூல் பாதிக்கப்படும் என்பதாலும், தயாரிப்பாளரின் நலனையும் கருத்தில் கொண்டு என்னால் வெளியிட இயலவில்லை. மன்னிக்கவும். மற்றவை திரையில். இவண் #புலிக்குட்டியோட தம்பி

இரு நண்பர்கள்

 நண்பன் 1: டேய் மச்சான், நேத்து உங்க வீட்டுக்கு வந்து உன்னை எங்க னு கேட்டேன், அதுக்கு உங்கப்பா “அந்த மாடு 🐂 எங்கயாவது மேயப் போயிருக்கும்” ன்னாரு டா. எனக்கு எவ்ளோ கஷ்டமா போச்சு தெரியுமா…

நண்பன் 2: அது கூட பரவால்ல மாப்ள, நான் திரும்பி வந்ததும் என் கிட்ட “உன்னை தேடி ஒரு எருமை வந்துச்சு” ன்னாரு டா …

ஒரு பையன்

 ஒரு பையன் அவனோட MOBILEல தெரியாம format பண்ணிட்டான். so அதில இருந்த numbers எல்லாம் delete ஆயிடிச்சு! அவனுக்கு எந்த numbersஉம் நினைவு இல்ல! அப்போ அவனுக்கு loverட இருந்தும் friendட இருந்தும் message வந்துச்சு

!-hi எண்டு. அவன் ரெண்டு numbersகும் who are you? எண்டு reply போடான்.

அதுக்கு ரெண்டு numbers லயும் இருந்து வந்த replys ……….

. lover : என்ன பாத்தா யார்? எண்டு கேக்குறா……. i hate u ………..

friend : டேய்! மச்சான், அது who are you இல்லைடா,how are you i ‘m fineda

தத்துவம்:lover அ விட friend தான் நண்பன் புரிந்து கொள்வான். நண்பேன்டா

                                                                          கடித்தவர் மகேஸ்வரி செல்வநாதன்

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY