தாலி கட்டி திருமண பந்தத்தில்இணைந்த பின்பும் கணவனுடன் மஞ்சத்தில் இணைய மறுக்கிறாள் நாயகி.நாயகன் தன மன வேதனையை இப்படி வெளிபடுத்துகிறான்.
இப்பாடல் வாலி அவர்களால் எழுதப்பட்டு இசைஞானி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு S.P.பாலசுப்ரமணியம் அவர்களால் பாடபட்டது..
என் மனதை கவர்ந்த பாடல். இந்த பாடலில் திருமணம் ஆன கதாநாயகி நாயகனை தொடவிடாததால் அவன் விரக தாபத்துடன் பாடும் பாடல்….
“மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
     அன்பே என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ 
    கண்ணே என் கண்ணே!
பூபாளமே கூடதெனும் வானம் உண்டோ சொல்”!
 
       என்று அவன் மனதில் தோன்றும் தாபத்தையும்
 
“தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் 
    வாழ்வதென்ன!
நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும்
    தேவையென்ன!
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம்
 கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்”!
 
        என்று அவனுடைய நண்பர்கள் போல வாழ்வதற்க்கு எதற்கு மாலை மாற்றி சொந்தமானாள் என்ற கேள்வியை அவள் முன் வைக்கிறான்.
 
“மேடையைப் போலே வாழ்கை அல்ல நாடகம் ஆனதும்
     விலகிச் செல்ல!
ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே
     பயணம் செல்ல!
விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா”!
 
 என்று இது ஒரு நாடகம் அல்ல நாம் ஓடையைப் போல விலகிச் செல்ல முடியாது. விண்ணோடு  சேர்ந்த வண்ண நிலாவைப்போல சேர்ந்து வாழலாம் வா என்று நாயகியை அழைப்பது போன்ற பாடல். 
                                                                                                         ஜெயா வீரப்பன்

Leave a comment

2 COMMENTS

    • ரொம்ப நன்றி பா. எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

LEAVE A REPLY