பாட்டி-வீடு01

வீட்டை அழகாய், அலங்காரமாய் வைத்துக்கொள்வது ஒரு கலை. அவசர வேலைகள் நிறைய இருந்தாலும், வீட்டுக்குள் நுழைந்தால் நம்மை அரவணைக்கும் தாயைப்போல மனத்துக்கு இதமான, பாதுகாப்பான, நிம்மதி கொடுக்கும் ஆலயமாக வீடு விளங்கவேண்டும்.

அப்படி இல்லாமல், குப்பை நிறைந்ததாய், பொருட்கள் அலங்கோலமாய் சிதறிக் கிடக்க, திரைச் சீலைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க, டி.வி. ஒரு பக்கம் பெரிதாய் அலறிக் கொண்டிருக்க, இந்தக் குப்பைகளின் நடுவே நாமும் வாழ்வது நன்றாக இருக்குமா?

வீடு குடிசையாக இருந்தாலும் அடுக்கு மாடி வீடாக இருந்தாலும் பங்களாவாக இருந்தாலும், அது நாம் வாழும் இருப்பிடமாயிற்றே! ஆகவே அதை ஒழுங்காகப் பராமரிப்பது மிக அவசியம். எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் அதை எப்படி அழகுபடுத்துவது? என்பதைத்தான் இன்டீரியர் டெகரேஷன் எனும் கலை நமக்கு விளக்குகிறது.

பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வீட்டைப் பார்த்தவுடனே, அதுபோல் தங்கள் வீட்டையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமாகத் தோன்றும். வீட்டை நன்கு பராமரிப்பவரைப் பார்த்து பொறாமைப்படுவதைக் காட்டிலும், தங்களின் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்

 வீடு முழுவதும் அலங்காரம் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டின் வாசல், வரவேற்பரை, சாப்பிடும் இடம் ஆகியவற்றை அழகுபடுத்தினால் போதும்.

 வீட்டுக்குள் வரும்போதே கொண்டாட்டக் களை தெரிய வேண்டும்.  மனதில் உற்சாகம் பொங்க வேண்டும். அதில்தான் நம் திறமை இருக்கிறது. அதனால்  வாசலும் வரவேற்பறையும் பொலி வோடு இருப்பது முக்கியம்.

அதற்கு அதிக செலவு செய்யத் தேவையில்லை. பொருட்களைக் கொஞ்சம் இடம் மாற்றி வைத்து வீட்டைப் புதிதாக்கி விடலாம். தற்போது பலவகையான வண்ணத் தோரணங்கள் கிடைக் கின்றனஅவற்றை வாங்கித் தொங்கவிடலாம்.  எத்தனை ‘ரெடி மேட்’ அலங்காரங்கள் இருந்தாலும், சந்தனம், குங்குமம் மாவிலை தோரண அழகுக்கு ஈடில்லை.

142149533

வாசல் நிறைய என அவசியமில்லை.கச்சிதமாக சிறிதாக அழகாக ஒரு கோலம்.நம் வீட்டு வாசல் மங்கலத்தன்மை நிறைந்ததாகி விடும்

download4

 

 வாசலில் பச்சை இலை களுடன் கூடிய செடிகளை வாங்கி வைக்கலாம். மாக்கோலம் போட்டு, அதன் மீது மலர்களை அடுக்கி அலங்கரிக்கலாம். மாலை வேளை யில் நடுவில் அல்லது ஓரத்தில் விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.

-500x500.jpg003-500x500 

ஒரு பெரிய மண் சட்டியிலோ ,பித்தளை சட்டியிலோ வண்ணங்கள் நிறைந்த ரோஜா,  டெய்சி, சூரியகாந்தி போன்ற பெரிய மலர்களையும் இலை களையும் அடுக்கி கண்ணுக்குத் தெரியும் மூலையில் வைக்கலாம்.இதற்கு நம் வீட்டு தோட்டத்தில் பூக்கும் எளிய மலர்கள் கூட போதும்.

 

douglas-peebles-flowers-floating-in-bowl-of-water

இதோ உங்கள் வீட்டுவாசல் அழகாகிவிட்டது.

Leave a comment

2 COMMENTS

LEAVE A REPLY