என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

 

 

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா,

சத்தம் போட்டா கொலுசு வருமா?

 

 

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

 

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

 

 

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

 

 

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

 

 

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

 

 

ஓடுற எலி வாலை புடிச்சா நீ ‘கிங்’கு
ஆனா…
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

 

 

 

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! 
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! 
நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். 

 

இரு மாணவர்கள்
கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா? 
தெரியலையே… 
ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்! 

 

இரண்டு நண்பர்கள்
பாத்திரக் கடைக்கு வேலைக்கு புதுசா ஒரு பையனை சேர்த்தீங்களே, எப்படி நடக்கிறான்?
நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்கிறான். 

 

இரண்டு நண்பர்கள்

 
இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல.
உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே? 
பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே! 

 

இரண்டு சிறுவர்கள்
புதுசா வந்திருக்கிற டீச்சர் இங்கிலீஷ்ல நல்லாத்தான் பாடம் நடத்துறாங்க. 
ஆனா நடு நடுவிலே திடீர்னு நிறுத்திட்டு விளம்பரம் செய்ற மாதிரி 
அதை உபயோகிங்க, இதை உபயோகிங்கன்னு சொல்றாங்க அது ஏன்டா?
அதுவா…அவங்க இங்கிலீஷ் கத்துக்கிட்டது டி.வியிலயாம். 

தாத்தாவும் பேத்தியும்
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… 
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம். 
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். 
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 

 

இரண்டு சிறுவர்கள்
மழையில நனைஞ்சு உன் மண்டை வீங்கிடுச்சா? 
ஆமாம்! நான் நனைஞ்சது கொட்டுற மழையில. 

 

இரண்டு நண்பர்கள்
ஏன் மச்சி உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீதானா? எனக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்பேன்! 
சரி மாப்ள… எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா!

 

இரண்டு பள்ளி சிறுவர்கள்
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன். 
எப்படிச் சொல்ற? 
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, 
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க. 

ஆசிரியரும் மாணவனும்

 
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. 
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. 
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ? 
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்! 

 

Leave a comment

LEAVE A REPLY