HERE is a  Easy method of making beautiful crystal ornament

 

நமது 10 விரல்களையும் மூலதனமாக கொண்டு பல்வேறு கலை பொருட்களை உருவாக்க முடியும். கற்பனை திறன் மிக்க பெண்கள் வீட்டிற்கு தேவையான மிதியடியில் இருந்து கொலுசு, வளையல் போன்ற அலங்கார பொருட்கள் வரை தாங்களே தயாரித்துக் கொள்ளலாம்.

E-CRYSTAL-ANKLET-NO-HEART

 

 

ஜெட் வேகத்தில்  தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில்  பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள்  கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர்.

நகைகளில் எப்பொழுதும் கொலுசுகள் தனித்துவமானவை.மிளிறும் பெண்மைக்கான அடையாளங்கள் இவை.மிக எளிமையான முறையில், கிரிஸ்டல் கொலுசு செய்யலாம்.

 

crystal anklet rs

கிறிஸ்டல் கொலுசு தயாரிக்க தேவையான பொருட்கள்

 இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும்.

எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல்  

சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் 

கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் . கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.

ஊக்கு ஒரு செட் 

ஸ்க்ரூ செட் 

கட்டர், பிளேயர..

நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

 

_something_blue_anklet_medium_bridal_wedding_swarovski_crystal_gold_fi_4bc8b458

 

முதலில் சுமார் 30 செமீ நீளத்திற்கு  , ‘கியர் ஒயரை’ வெட்டி, இணைப்பு கொக்கியில் கோர்த்து, கியர் லாக்கை கொண்டு, ‘லாக்’ செய்ய வேண்டும் கொள்ளவேண்டும்.

அதில் முதலில் தங்க நிற கிறிஸ்டல் பாசிகள் 4ஐ கோர்த்துக்கொள்ள வேண்டும். அதையடுத்து தங்க நிற மணிகள் 4ஐ கோர்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

hqdefault

 

 

 

அதையடுத்து மீண்டும் கிறிஸ்டல் பாசிகளையும், அடுத்தது தங்கநிற மணிகளையும் கோர்த்துக்கொள்ள வேண்டும்

.தொடர்ந்து இது போல் கோர்த்துக் கொண்டு வர வேண்டும். கொலுசுக்கு தேவை யான நீளம் வந்தவுடன்முழுவதும் கோர்த்து முடித்த பின், இணைப்பு கொக்கியையும், கியர் லாக்கையும் ஒன்றாக சேர்த்து இறுக்கமாக கட்டரால் முடிச்சு போட வேண்டும்

 

red_blue_green_yellow_swarovski_crystal_anklet_c230c85e

.முனையில் ஊக்குகளை ப்ளேயரின் உதவியுடன் பொருத்தி விட்டால் அழகான கொலுசு தயார்.

நம் கற்பனை திறனுக்கு ஏற்ப குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தி, மென்மேலும் அழகூட்டலாம்

DSC_1365.JPGaaa__90656.1387664281.300.300

 

 

Leave a comment

LEAVE A REPLY